கொரோனா ஊரடங்கால் மார்க் ஜூகர்பெர்க்கு அடித்த அதிஷ்டம்! எத்தனை பில்லியன் டொலர்

Report Print Abisha in அமெரிக்கா
244Shares

பேஸ்புக் நிறுவனரும் தலைமைச் செயல் அதிகாரியுமான மார்க் ஜூகர்பெர்க்கின் சொத்து மதிப்பு, மார்ச் இரண்டாவது வாரத்தில் $57.5 பில்லியன் டொலராக இருந்தது. தற்போது இவரது சொத்து மதிப்பு$87.5 பில்லியன் டொலராக உயர்ந்துள்ளது. இதனால் கோடீஸ்வரர்கள் பட்டியலில் வாரன் பஃபெட்டை பின்னுக்குத் தள்ளி முன்னேறியுள்ளார் ஜூகர்பெர்க்.

பேஸ்புக் நிறுவனர், மார்க் ஜூகர்பெர்க்கின் பங்கு கடந்த இரண்டு மாதங்களில் $30 பில்லியன் டொலர் அதிகரித்துள்ளது.

தற்போது பேஸ்புக்கின் பங்கு மதிப்பு, $230.75 டொலர் என்ற அளவில் வர்த்தகமாகி உள்ளது. கரோனா வைரஸால் உலகம் முழுவதும் ஊரடங்கு அமல்படுத்தப்பட்டுள்ளதால் மெசஞ்சர் ரூம் மற்றும் ஜூம் உள்ளிட்ட வசதிகளை பேஸ்புக் உருவாக்கித் தந்துள்ளது.

மெசஞ்சர் ரூம் சேவையில் ஒரே சமயத்தில் 50 பேர் வரை உரையாட முடியும். இதனால் வாட்ஸ் அப் மற்றும் இன்ஸ்டாகிராம் உபயோகிப்பாளர்கள் இந்த வசதியை பயன்படுத்திக் கொள்கின்றனர்.

வீட்டிலிருந்தபடி பணி புரிவது என்பது பேஸ்புக் ஊழியர்கள் மத்தியில் ஒரு பாசிட்டிவான தாக்கத்தை உருவாக்கி உள்ளது. வீட்டிலிருந்து பணி புரியும்போது அவர்களது பங்களிப்பானது வழக்கமாக அலுவலகத்தில் இருந்து பணிபுரிவதை விட அதிகரித்துள்ளது என்று தெரியவந்துள்ளது.

மேலும் அமெரிக்கா செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்