பெண்ணை திருமணம் செய்து கொண்டு வாழ்ந்து வந்த மற்றொரு பெண்! கொலையில் முடிந்த சம்பவத்தில் வெளியான முக்கிய தகவல்

Report Print Raju Raju in அமெரிக்கா
220Shares

அமெரிக்காவில் தனது மனைவியை கொலை செய்துவிட்டு தலைமறைவான பெண்ணை பொலிசார் கைது செய்துள்ளனர் என தகவல் வெளியாகியுள்ளது.

நியூ ஜெர்சியை சேர்ந்த Mayra Gavilanez-Alectus (48) என்ற பெண்ணும் Rebecca Gavilanez-Alectus (32) என்ற இளம்பெண்ணும் கடந்த 2018ல் திருமணம் செய்து கொண்டு ஒரே வீட்டில் வசித்து வந்தனர்.

இந்த நிலையில் சமீபத்தில் Rebecca வீட்டிலிருந்து சடலமாக மீட்கப்பட்டார்.

பொலிசார் விசாரணையில் Mayra தனது மனைவியான Rebecca-வை சிலிண்டரால் அடித்து கொலை செய்தது தெரியவந்தது. பின்னர் தப்பியோடிய Mayra-வை பொலிசார் தேடி வந்தனர்.

இந்த சூழலில் டெக்ஸாஸில் வைத்து அவரை பொலிசார் கைது செய்துள்ளனர்.

Mayra டெக்ஸாஸுக்கு பேருந்து மூலம் வந்திருக்கலாம் என கூறியுள்ள பொலிசார் தற்போது அவர் Harris கவுண்டி சிறையில் அடைக்கப்பட்டுள்ளதாக தெரிவித்துள்ளனர்.

விரைவில் Mayra நியூ ஜெர்சிக்கு அழைத்து செல்லப்படவுள்ளார்.

Mayra போன்ற ஆபத்தான நபர் உடனடியாக கைது செய்யப்பட்டது திருப்தி அளிக்கிறது என வழக்கறிஞர் Bradley D. Billhimer கூறியுள்ள நிலையில், இந்த கொலை தொடர்பிலான பின்னணி தகவல்கள் Mayraவிடம் விசாரணை நடத்தப்பட்ட பின்னர் தெரியவரும் என எதிர்பார்க்கப்படுகிறது.

மேலும் அமெரிக்கா செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்