இந்த குறைபாடு கொண்ட கொரோனா நோயாளிகளுக்கு சிகிச்சை இல்லை: புதிய அறிவிப்பால் கலங்கும் மக்கள்

Report Print Arbin Arbin in அமெரிக்கா

அமெரிக்காவில் எகிறும் கொரோனா பாதிப்பு எண்ணிக்கையால் மருத்துவ பொருட்களுக்கு தட்டுப்பாடு வர வாய்ப்புள்ளதை கருத்தில் கொண்டு யார் யாருக்கு சிகிச்சை அளிக்க வேண்டும் என்ற விதிமுறையை வழங்கியுள்ளனர்.

அமெரிக்காவின் அலபாமா மாகாணம் முதற்கட்டமாக குறித்த விதிமுறைகளை அமுலில் கொண்டுவர உத்தரவு பிறப்பித்துள்ளது.

அதன்படி, டவுன் சிண்ட்ரோம், ஆட்டிசம் மற்றும் cerebral palsy உள்ளிட்ட குறைபாடு கொண்டவர்கள் கொரோனாவில் சிக்கினால் அவர்களுக்கு சிகிச்சை மறுக்கப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

அலபாமா நிர்வாகத்தின் இந்த கடும்போக்கு அறிவிப்புக்கு சமூக ஆர்வலர்கள் மத்தியில் கொந்தளிப்பை ஏற்படுத்தியுள்ளது.

அலபாமா மாகாண நிர்வாகத்தின் பட்டியலில் மேலும் சில குறைபாடு கொண்டவர்களுக்கும் சிகிச்சை அளிப்பதை விலக்கியுள்ளனர்.

இதே போன்ற விதிமுறைகளை வாஷிங்டன் மற்றும் அரிசோனா மாகாண நிர்வாகம் தரப்பிலும் வழங்கப்பட்டுள்ளது.

இந்த விவகாரம் தொடர்பில் தற்போது ஒரு தெளிவான அறிக்கையை வெளியிட வேண்டும் என்ற கோரிக்கையை சமூக ஆர்வலர்கள் முன்வைத்துள்ளதுடன்,

அமெரிக்க சுகாதார அமைப்புக்கும் மனித உரிமைகள் சேவைக்கும் தனித்தனியாக புகார் மனுவும் அளித்துள்ளனர்.

ஏற்கெனவே இதே குறைபாடுகளை கொண்ட 7 மில்லியன் அமெரிக்கர்கள் காப்பகன்ஹ்களில் உள்ளனர் என்றும், அவர்கள் குழுவாக இருப்பதால் கொரோனா வைரஸ் பரவல் அபாயம் இருப்பதாகவும் சமூக ஆர்வலர்களால் எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

இந்த மக்களால் சமூக விலகலை கடைபிடிக்கவோ, தொடர்ந்து கை கழுவும் நடவடிக்கையில் ஈடுபடவோ முகமூடிகளை பயன்படுத்தவோ முடியாத சூழல் உள்ளதால், அவர்களுக்கு உரிய பாதுகாப்பு வழங்கவும் கோரிக்கை வைக்கப்பட்டிருந்தது.

மேலும் அமெரிக்கா செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்