கொரோனாவின் அடுத்த இலக்காக மாறவிருக்கும் அமெரிக்க மாகாணம்: காரணங்கள் ஒன்று இரண்டல்ல!

Report Print Balamanuvelan in அமெரிக்கா

அமெரிக்காவில் கொரோனா தொற்று அதிவேகத்தில் பரவி வரும் நிலையில், ப்ளோரிடா கொரோனாவின் அடுத்த இலக்காக மாறலாம் என்ற கருத்து உருவாகியுள்ளது.

அதற்கு ஒன்றிரண்டு காரணங்களல்ல, பல காரணங்களைக் கூற முடியும்! 2,477 பேர் கொரோனா தொற்றிற்கு ஆளாகி, 28 பேர் உயிரிழந்துள்ள நிலையில், அதிக அளவில் கொரோனா நோயாளிகள் இருக்கும் ஏழாவது இடமாக உள்ளது.

ஆனால், அது சீக்கிரத்தில் அமெரிக்காவிலேயே அதிக கொரோனா நோயாளிகள் உள்ள இடமாக மாற வாய்ப்புள்ளது என கருதப்படுகிறது.

கொரோனா பரிசோதனை செய்யும் வசதி இப்பகுதியில் குறைவாக உள்ளது. அப்படியே பரிசோதனை செய்தாலும், பரிசோதனை முடிவுகள் வர ஏழு முதல் பத்து நாட்கள் வரை காத்திருக்க வேண்டியுள்ளது.

அத்துடன் அமெரிக்காவிலேயே அதிக அளவில் முதியவர்கள் வாழும் மாகாணம் ப்ளோரிடா மாகாணம்தான்.

முதியவர்கள் எளிதில் கொரோனா தொற்றுக்கு ஆளாகிவிடுவார்கள் என்பது அனைவரும் அறிந்ததே.

இதற்கிடையில், இன்னமும் பல மில்லியன் மக்கள் தினந்தோறும் கடற்கரைகளில் கூடுகிறார்கள்.

ஆகவே, விரைவில் ப்ளோரிடா அதிக அளவில் கொரோனா நோயாளிகளைக் கொண்ட மாகாணமாக மாறிவிடலாம் என நிபுணர்கள் கவலை தெரிவிக்கிறார்கள்

மேலும் அமெரிக்கா செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்