வேண்டுமென்றே எச்சிலை துப்பி பார்சலில் தேய்த்த அமேசான் சாரதி: கமெராவில் சிக்கிய காட்சி!

Report Print Balamanuvelan in அமெரிக்கா

ஒரு பக்கம் கொரோனாவைக் கண்டு உலகமே நடுங்கிப்போயிருக்கிறது, மறு பக்கம் கொரோனாவை பரப்பும் அருவருப்பான செயல்களில் சிலர் ஈடுபட்டு வருகிறார்கள்.

லாஸ் ஏஞ்சல்சில் வீடு ஒன்றிலிருந்த கண்காணிப்பு கமெரா ஒன்றில், அமேசான் பொருட்களை டெலிவரி செய்யும் ஒருவர், வேண்டுமென்றே எச்சிலைத் தொட்டு, தான் கொண்டு வந்த பார்சல் மீது தேய்ப்பதைக் காணமுடிகிறது.

அவருக்கு கொரோனா இருக்கிறதா, அவர் யார், என்பதெல்லாம் தெரியாது, ஆனாலும் இவ்வித அருவருப்பான செயல்களில் சிலர் ஈடுபட்டு வரும் செயல்கள் தொடர்கின்றன.

அந்த பொருளை பெறவேண்டிய வாடிக்கையாளரும், அந்த வீட்டில் வசிப்பவருமான Gavin M. என்பவர் அந்த வீடியோவை ட்விட்டரில் பகிர்ந்துள்ளார்.

அமேசானை தான் தொடர்புகொள்ள முயன்றுவருவதாக கூறும் அவர் வெளியிட்டுள்ள அந்த வீடியோ வைரலாகியுள்ளது.

அமெரிக்காவில் 92,000 பேருக்கு அதிகமானோர் கொரோனா தொற்றுக்கு ஆளாகி, சுமார் 1,400 பேர் உயிரிழந்துள்ள நிலையிலும், கொஞ்சம் கூட மனசாட்சியில்லாமல் இத்தகைய மோசமான செயல்களில் சிலர் ஈடுபட்டு வருவது தொடரத்தான் செய்கிறது.

மேலும் அமெரிக்கா செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்