கொரோனாவால் உயிரிழந்த செவிலியரின் இறுதி வார்த்தைகள்! தங்கைக்கு அனுப்பிய குறுந்தகவல்

Report Print Santhan in அமெரிக்கா

அமெரிக்காவில் கொரோனா வைரஸால் உயிரிழந்த செவிலியர் ஒருவர் தன் தங்கைக்கு இறுதியாக அனுப்பிய குறுந்ததகவல் வெளியாகியுள்ளது.

கொரோனா வைரஸால் அமெரிக்காவில் தற்போது வரை 104,256 பேர் பாதிக்கப்பட்டுள்ளதுடன், 1,704 பேர் உயிரிழந்துள்ளனர்.

கொரோனாவல் அதிகம் பாதிக்கப்பட்ட நாடுகளின் வரிசையில் அமெரிக்கா இப்போது முதலிடத்தில் உள்ளது.

இந்நிலையில் அமெரிக்காவின் New York-ல் இருக்கும் Mount Sinai மருத்துவமனையில் Kious Kelly என்ற 48 வயது நபர் செவிலியராக பணியாற்றி வந்தார்.

இவர் கொரோனா வைரஸ் காரணமாக உயிரிழந்துவிட்டார். போதுமான பாதுகாப்பு உபகரணங்கள் இல்லாததால், குப்பை போட பயன்படுத்தும் கவர் ஒன்றை அணிந்து பணியாற்றிய செவிலியர்களில் இவரும் ஒருவர்.

சரியான பாதுகாப்பு உபகரணங்கள் இல்லாததன் காரணமாகவே நோய் தொற்று ஏற்பட்டு இறந்துவிட்டதாக கூறப்பட்டது.

இதையடுத்து, தற்போது இவர் இறப்பதற்கு முன்னர் தன்னுடைய சகோதரியான Marya Sherron-க்கு இறுதியாக குறுந்தகவல் ஒன்றை அனுப்பியுள்ளார். அதில், என்னால் பேச முடியாது, ஏனெனில் என்னால் சுவாசிக்க முடியவில்லை, உன்னை எனக்கு மிகவும் பிடிக்கும், நீ போய் தூங்கு என்று குறிப்பிட்டுள்ளார்.

அதற்கு அவரின் சகோதரி உங்களால் நிச்சயம் இதில் இருந்து வெளி வர முடியும், நாங்கள் பிரார்த்திக்கிறோம் என்று குறிப்பிட்டுள்ளார்.இதை சமூகவலைத்தள பக்கத்தில் பதிவேற்றம் செய்ததால், இது வைரலாகி வருகிறது.

மேலும் அமெரிக்கா செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்