வீட்டிலிருந்து வெளியேறும் கழிவு நீர் மூலம் கொரோனா வைரஸ் பரவலாம்: அறிவியலாளர்கள் கருத்து!

Report Print Balamanuvelan in அமெரிக்கா

கொரோனா வைரஸ் அல்லது குறைந்தபட்சம் அதன் மரபணு, மனிதக் கழிவில் வெளியேறலாம் என முக்கிய ஆய்வில் தெரியவந்துள்ளது.

இந்த மனிதக் கழிவு, கொரோனா வைரஸ் பரவுவதற்கான ஒரு வழியாக மாற வாய்ப்புள்ளது என்கிறார்கள், ஸ்டான்போர்டு பல்கலைக்கழக அறிவியலாளர்கள்.

அந்த ஆய்வை முன்னின்று நடத்துபவரான Alexandria Boehm என்னும் அறிவியலாளர் கூறும்போது, இந்த வகையில் கொரோனா பரவுவது பெரிய அளவில் இருக்காது என்றாலும், சுத்திகரிக்கப்படாத மனிதக் கழிவு கலந்த தண்ணீரை தொட வாய்ப்புள்ளவர்களுக்கு கொரோனா தொற்ற வாய்ப்புள்ளது என்கிறார்.

நோய்த்தடுப்பு மையங்களின் கூற்றுப்படி, கொரோனா வைரஸ் ஆறு அடிக்குள் நெருங்கி நிற்கும் ஒருவரிடமிருந்து மற்றவருக்குத்தான் பெருமளவில் பரவுவதாக நம்பப்படுகிறது.

இருமும்போதும் தும்மும்போதும் ஒருவரிடமிருந்து பரவும் வைரஸ் துகள்கள், மற்றவரின் மூக்கு அல்லது பேசுவதன் மூலம் கொரோனா தொற்று பரவும். இதுபோக, வைரஸ் பட்ட ஒரு பரப்பை அல்லது இடத்தை ஒருவர் தொட்டுவிட்டு, பிறகு தன் வாய், மூக்கு அல்லது கண்களைத் தொடுவதன் மூலமும் கொரோனா பரவலாம் என்றும் கருதப்படுகிறது.

இருந்தாலும், இவ்வகையில் கொரோனா பரவுவது குறைவுதான் என்றும் நோய்த்தடுப்பு மையங்கள் கருதுகின்றன.

Image: GETTY

மேலும் அமெரிக்கா செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்