மளிகை கடைக்குள் சென்று அனைத்து பொருட்கள் மீதும் இருமிய பெண்! கொரோனா அச்சத்தில் கடை ஊழியர்கள் செய்த செயல்

Report Print Raju Raju in அமெரிக்கா

அமெரிக்காவில் பெரிய மளிகைக்கடைக்குள் நுழைந்த பெண்ணொருவர் அங்கிருந்த பொருட்கள் மீது வேண்டுமென்றே இருமிய நிலையில் கொரோனா வைரஸ் அச்சத்தில் $35,000 மதிப்புள்ள பொருட்கள் அப்புறப்படுத்தப்பட்டுள்ளது.

Pennsylvania-வில் உள்ள பெரிய மளிகை கடைக்குள் பெண்ணொருவர் சென்றிருக்கிறார்.

பின்னர் அங்கிருந்த பேக்கிரி உணவுகள், இறைச்சி உணவுகள், மற்ற பொருட்கள் என அனைத்தின் மீது இருமியிருக்கிறார்.

இருமல் மூலம் கொரோனா வைரஸ் பரவும் என்ற நிலையில் இதை பார்த்து அதிர்ச்சியடைந்த கடை ஊழியர்கள் பொலிசுக்கு தகவல் கொடுத்தனர்.

சம்பவ இடத்துக்கு வந்த பொலிசார் அப்பெண்ணை காவல் நிலையத்துக்கு அழைத்து சென்றனர்.

அப்பெண்ணின் மனநலம் குறித்து பரிசோதனை செய்யப்படவுள்ள நிலையில் அதன்பின்னர் அவர் மீது கிரிமினல் வழக்கு பதியப்படலாம் என தெரிகிறது.

அதே சமயத்தில் அவருக்கு கொரோனா பாதிப்பு இருக்கிறதா என்பது பரிசோதனை முடிவுக்கு பின்னரே தெரியவரும் என பொலிசார் கூறியுள்ளனர்.

இதனிடையில் குறித்த கடையில் உள்ள $35,000 மதிப்புள்ள பொருட்களை கடை ஊழியர்கள் அப்புறப்படுத்தி கீழே கொட்டி அழித்துள்ளனர்.

சுகாதார அதிகாரிகளுடன் ஆலோசித்த பின்னரே இந்த விடயம் மேற்கொள்ளப்பட்டது.

முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக கடை முழுவதும் கிருமி நாசினி தெளிக்கப்பட்டு சுத்தம் செய்யப்பட்டதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

மேலும் அமெரிக்கா செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்