தாங்கமுடியாத தலைவலியால் அவதிப்பட்ட பெண்! மண்டை ஓட்டை X-ray செய்த மருத்துவர்களுக்கு ஏற்பட்ட அதிர்ச்சி

Report Print Raju Raju in அமெரிக்கா

அமெரிக்காவில் பெண்ணின் தலைக்குள் துப்பாக்கி குண்டு இருப்பதை கண்டுபிடிக்காமல் அவரை வீட்டுக்கு அனுப்பிய மருத்துவர்களின் செயல் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

Southwest Miami-Dade கவுண்டியை சேர்ந்தவர் ஷகினா ஜெபர்சன். ஓரினச்சேர்க்கையாளரான இவர் ஜெனட் மெட்லி என்ற பெண்ணை திருமணம் செய்து கொண்டு வாழ்ந்து வந்தார்.

இந்நிலையில் கடந்த செவ்வாய்க்கிழமை இரவு ஷகினா வீட்டு வாசலுக்கு வந்த போது மர்ம நபர் ஒருவர் இரண்டு முறை அவரை நோக்கி துப்பாக்கியால் சுட்டுள்ளார்.

இதையடுத்து வீட்டருகில் இருந்த மருத்துவமனைக்கு உடனடியாக ஷகினா சென்ற நிலையில் அங்கு அவருக்கு x-ray கூட எடுக்கப்படாமல் தலையில் கட்டு போட்டு அனுப்பியுள்ளனர்.

பின்னர் வீட்டுக்கு வந்த சில நாட்களில் ஷகினாவின் பின் பகுதி தலையில் அதிக வலி ஏற்பட்டது.

இது குறித்து ஜெனட்டிடம் அவர் கூறினார்.

தாங்க முடியாத வலி தொடர்ந்த நிலையில் நேற்று முன் தினம் வேறு மருத்துவமனைக்கு ஷகினாவை ஜெனட் அழைத்து சென்றார்.

அப்போது அங்கிருந்த மருத்துவர்கள் ஷகினாவின் மண்டை ஓடு பகுதியில் x-ray எடுத்த போது அதிர்ச்சியடைந்தனர்.

காரணம் தலைக்கு உள்ளே துப்பாக்கி குண்டு சிக்கியிருப்பது தெரிந்தது. இதை தொடர்ந்து ஷகினாவுக்கு அறுவை சிகிச்சை மேற்கொள்ளப்பட்டதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.

அவரின் உடல் நிலை தற்போது எப்படியுள்ளது என்பது குறித்த விபரம் இன்னும் வெளியாகவில்லை.

மேலும் அமெரிக்கா செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்