மனித உடலை 30 நாட்களில் மட்கச் செய்யும் புதுவித நடைமுறை: அமெரிக்காவில் கண்டுபிடிப்பு!

Report Print Balamanuvelan in அமெரிக்கா
227Shares

சுற்றுச்சூழலுக்கு உகந்த வகையில், இறந்தவர்களின் உடலை 30 நாட்களில் மட்கச் செய்யும் நடைமுறை ஒன்றை அமெரிக்க நிறுவனம் ஒன்று கண்டுபிடித்துள்ளது.

அதன்படி, ஒரு பெட்டி போன்ற அமைப்பிற்குள் இறந்தவர்களின் உடல் வைக்கப்பட்டு, அதனுடன் மரத்துகள்கள், தாவர பாகங்கள் வைக்கப்பட்டு, 131 டிகிரி வெப்பநிலைக்கு உட்படுத்தப்படுகின்றன. அதன் விளைவாக 30 நாட்களில் உடல் மட்கிப்போகிறது.

மேலும் உடலை சாதாரண முறையில் எரிப்பதால் வெளியாகும் கரியமில வாயுவை விட பல டன்கள் குறைவான கரியமில வாயுவே இம்முறையில் உற்பத்தியாகிறது.

அத்துடன் அந்த உடலிலிருந்த நோய்க்கிருமிகள் முற்றிலும் அழிந்துபோவதுடன், மருந்துகளை உட்கொள்ளும்போது வெளியாகும் ரசாயனங்களும் முற்றிலும் செயலிழந்துபோவதும் கண்டுபிடிக்கப்பட்டுள்ளதால், இந்த நடைமுறை சுற்றுச்சூழலுக்கு உகந்த ஒன்றாக உள்ளது.

ஆறு தன்னார்வலர்கள் தாங்கள் இறந்ததும் தங்கள் உடலை இம்முறைக்கு பயன்படுத்த கொடுத்ததைத் தொடர்ந்து, இந்த நடைமுறை சோதித்துப்பார்க்கப்பட்டது.

மனித உடலை மட்கச் செய்யும் இந்த நடைமுறை செயல்படுத்தப்படுவது உலகிலேயே இதுவே முதல் முறையாகும்.

அத்துடன், அதிகாரப்பூர்வமாக 2021ஆம் ஆண்டு பிப்ரவரி மாதம், இந்த நடைமுறை வாஷிங்டன் மாகாணத்தில் அறிமுகம் செய்யப்பட உள்ளது.

மேலும் அமெரிக்கா செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்