6 வயது சிறுமிக்கு நடைபெறும் இறுதிச்சடங்கு! கண்ணிமைக்கும் நேரத்தில் நேர்ந்த துயரம்

Report Print Raju Raju in அமெரிக்கா
181Shares

அமெரிக்காவில் 6 வயது சிறுமிக்கு இறுதிச்சடங்கு ஏற்பாடுகள் நடக்கும் நிலையில் அது பலரையும் சோகத்தில் ஆழ்த்தியுள்ளது.

Maryana Kranz என்ற 6 வயது சிறுமி சில தினங்களுக்கு முன்னர் பள்ளிக்கு செல்வதற்காக பேருந்துக்கு காத்திருந்தார்.

அப்போது பள்ளி பேருந்துக்கு அருகில் வந்த வேறு பேருந்து சிறுமி Maryana Kranz மீது கண்ணிமைக்கும் நேரத்தில் வேகமாக மோதியதில் அவர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார்.

சிறுமியின் மரணம் அவர் குடும்பத்தாரையும், உறவினர்களையும் அதிர்ச்சியிலும், சோகத்திலும் ஆழ்த்தியுள்ளது.

Maryana Kranz-ன் இறுதிச்சடங்கு வரும் 20ஆம் திகதி மாலையில் நடைபெறவுள்ளது.

மழலை மொழியில் அனைவரிடமும் பேசி கொண்டிருந்த பள்ளிக்கூட சிறுமிக்கு இறுதிச்சடங்கு நடப்பது மிகவும் வேதனையளிப்பதாக அவர் படிக்கும் பள்ளிக்கூட தலைமை சார்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதனிடையில் சிறுமி மீது வாகனத்தை மோதிய நபர் மீது பொலிசார் வழக்குப்பதிவு செய்தார்களா மற்றும் அவர் கைது செய்யப்பட்டாரா என்ற விபரம் இன்னும் தெரியவில்லை.

மேலும் அமெரிக்கா செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்