துணையைத் தேடி 14,000 கி.மீ அலைந்த ஓநாய்: இறுதியில் நடந்த சம்பவம்

Report Print Arbin Arbin in அமெரிக்கா

தனக்குரிய துணையைத் தேடி சுமார் 2 ஆண்டு காலம் தனியாக அலைந்த பெண் ஓநாய் ஒன்று இறுதியில் இறந்த நிலையில் கண்டெடுக்கப்பட்டுள்ளது.

அமெரிக்காவின் வடமேற்கு மாகாணமான ஓரிகன் மற்றும் கலிபோர்னியா எல்லைப்பகுதிக்குள் 4 வயதான இந்த ஓநாய் சுமார் 8,700 மைல்கள் அலைந்துள்ளது.

இரண்டு ஆண்டுகள் நீண்ட இந்த ஓநாயின் தேடுதலானது நாளுக்கு 21 கி.மீ தொலைவு வியாபித்துள்ளது.

வடகிழக்கு கலிபோர்னியாவில் பெப்ரவரி 5 ஆம் திகதி OR-54 என பெயரிடப்பட்டுள்ள இந்த ஓநாய் இறந்த நிலையில் மீட்கப்பட்டது.

இதன் கழுத்தில் பொருத்தப்பட்டிருந்த கண்காணிப்பு கருவி ஒன்று கடந்த டிசம்பர் மாதம் செயல்பாட்டை நிறுத்தியுள்ளது.

இதனையடுத்து குறித்த ஓநாய் மரணமடைந்த உறுதியான காரணம் தொடர்பில் அறிந்துகொள்ள முடியவில்லை என ஆய்வாளர்கள் தெரிவிக்கின்றனர்.

ஓநாய் மரணமடைந்ததற்கான காரணம் தொடர்பில் தற்போது விசாரணை முன்னெடுக்கப்பட்டுள்ளதாக கூரப்படுகிறது.

சட்டவிரோத வேட்டையாடுதல் காரணமாக குறித்த இனத்திலான ஓநாய்களின் எண்ணிக்கை பெருமளவு சரிவை சந்தித்தது.

ஓரிகன் மாகாணத்தின் 54-வது சாம்பல் நிற பெண் ஓநாய் என்பதாலையே OR-54 என ஆய்வாளர்கள் பெயரிட்டிருந்தனர்.

மேலும் அமெரிக்கா செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்