அமெரிக்காவில் 13 வயது சிறுவனுக்கு நிர்வாண புகைப்படம் அனுப்பிய இந்திய ஆசிரியை: நாடு கடத்தல்?

Report Print Vijay Amburore in அமெரிக்கா

13 வயது சிறுவனுக்கு நிர்வாண புகைப்படங்களை அனுப்பி காதல் வலையில் விழ வைத்த ஜார்ஜியா நடுநிலைப்பள்ளி ஆசிரியை, நாடு கடத்தலை எதிர்கொள்ளலாம் என செய்தி வெளியாகியுள்ளது.

இந்தியாவை சேர்ந்த ரூமா பைரபகா (24) என்கிற இளம்பெண், ஜார்ஜியாவின் Hephzibah-வில் உள்ள Hephzibah நடுநிலைப் பள்ளியில் இயற்பியல் மற்றும் சமூக ஆய்வு பாடப்பிரிவு ஆசிரியையாக பணிபுரிந்து வந்தார்.

இவர் 13 வயது சிறுவனுக்கு நிர்வாண புகைப்படங்களை அனுப்பி, தவறாக நடந்துகொண்டதாக ஜனவரி 16 அன்று கைது செய்யப்பட்டார்.

அமெரிக்க குடிமகன் அல்லாத பைரபாக்கா, காவலில் இருந்து விடுவிக்கப்பட்டால் குடியேற்றக் காவலில் ஒரு கூட்டாட்சி தடுப்பு மையத்தில் வைக்கப்படுவார் என்று Augusta Chronicle செய்தி வெளியிட்டுள்ளது.

சிறுவர் துன்புறுத்தல் மற்றும் அநாகரீகமான நோக்கங்களுக்காக ஒரு குழந்தையை கவர்ந்திழுத்தல் உள்ளிட்டவைகளுக்காக அவர் கூடுதல் குற்றச்சாட்டுகளை எதிர்கொள்ள நேரிடும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. அவருக்கு 27700 டொலர் ஜாமீன் பாத்திரம் அறிவிக்கப்பட்டுள்ளது.

ஒருவேளை அவர் கூட்டாட்சி காவலில் இருந்து விடுவிக்கப்பட்டால், பாதிக்கப்பட்ட சிறுவன் உட்பட 18 வயதிற்கும் குறைவான யாரையும் அவர் சந்திக்கக்கூடாது எனவும், அவரது பாஸ்போர்ட்டை மாவட்ட வழக்கறிஞர் அலுவலகத்தில் ஒப்படைக்க வேண்டும் என்றும் நீதிபதி உத்தரவிட்டார்.

Richmond County School System

பைரபாக்கா மாணவர் விசாவில் அமெரிக்காவில் இருக்கிறார். இதன் விளைவாக நாடு கடத்தப்படுவதை எதிர்கொள்கிறார் எனவும் தகவல்கள் தெரிவிக்கின்றன.

வழக்குரைஞர்களின் கூற்றுப்படி, ஆசிரியை மீது காதல் வலையில் விழுந்து சிறுவன் பல சந்தர்ப்பங்களில் அவரை சந்திக்க வீட்டிற்கு தெரியாமல் சென்றுள்ளான்.

மேலும் அமெரிக்கா செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்

Latest Offers

loading...