உடலில் ஏதோ ஊர்வது போல் தெரிந்ததால் கண் விழித்த இளம்பெண்: விமானத்தில் அரங்கேறிய சம்பவம்!

Report Print Balamanuvelan in அமெரிக்கா

விமானத்தில் கண்ணயர்ந்து தூங்கிக்கொண்டிருந்த ஒரு பெண் தனது கால்சட்டைக்குள் ஏதோ ஊர்வது போல் தோன்ற, கண் விழித்துப்பார்த்தபோது, அவரது அருகிலிருந்த ஆண் ஒருவர் தன்னிடம் ஆபாசமாக நடந்து கொள்ள முயன்றதை அறிந்து அலறியுள்ளார்.

அட்லாண்டாவிலிருந்து டெட்ராயிட் செல்லும் விமானத்தில் பயணித்துக்கொண்டிருந்த Tia Jackson (22), ஜன்னலோர இருக்கையில் அமர்ந்து தூங்கிக்கொண்டிருந்திருக்கிறார்.

சட்டென அவரை யாரோ தொடுவது போலிருக்க, பக்கத்தில் உட்கார்ந்திருந்த நபரின் கை தெரியாமல் தன் மீது பட்டிருக்கலாம் என்று எண்ணியிருக்கிறார்.

ஆனால், தன் கால் சட்டைக்குள் அந்த நபர் கை விடுவதை உணர்ந்ததும் திடுக்கிட்டு விழித்து, ஏய் என்னைத் தொடாதே, தள்ளிப்போ என்று சத்தமிட்டிருக்கிறார்.

Credit: Fox 2

அத்துடன் விமான பணிப்பெண் ஒருவரிடமும் அவர் புகார் செய்ய, விமானத்தில் சரியாக யாரும் எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லையாம்.

Tia புகார் செய்யும் நேரத்தில், விமானம் விமான நிலையத்தில் இறங்க தயாராகிவிட்டதால், எல்லோரும் தங்கள் இருக்கையில் கட்டாயம் அமர்ந்திருக்கவேண்டிய சூழல் ஏற்பட்டதையடுத்து, தங்களால் Tiaவுக்கு வேறு இருக்கை ஒதுக்க முடியவில்லை என்று கூறியுள்ளது விமான நிறுவனம்.

விமானம் டெட்ராயிட்டில் நின்றதும், விமான நிலையத்தில் பொலிசாரிடம் புகாரளித்துள்ளார் Tia.

அத்துடன், வெறுமனே மன்னிப்புக் கேட்டால் போதாது, அந்த நபர் மீது நடவடிக்கை எடுக்கவேண்டும் என்றும் கோரியுள்ள Tia, இன்னொரு பெண் அந்த நபரிடம் சிக்குவதை தான் விரும்பவில்லை என்கிறார்.

Credit: Fox 2

Credit: Fox 2 Detroit

மேலும் அமெரிக்கா செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்

Latest Offers

loading...