கண் முன்னே குழந்தையின் கழுத்தை கவ்வி தூக்கிச் சென்ற சிங்கம்: மகனை காப்பாற்ற தந்தை செய்த துணிகர செயல்!

Report Print Balamanuvelan in அமெரிக்கா

அமெரிக்காவில், வனப் பூங்கா ஒன்றில் தனது குடும்பத்தினருடன் சென்றுகொண்டிருந்த மூன்று வயது சிறுவன் ஒருவனை சிங்கம் ஒன்று கவ்விச்செல்ல, அவனது தந்தையின் சமயோகித நடவடிக்கையால் சிறுவன் தப்பியுள்ளான்.

கலிபோர்னியாவிலுள்ள Whiting Ranch வனப்பூங்கா என்ற பூங்காவில் ஒரு குடும்பம் நேற்று மாலை 4.15 மணியளவில் நடந்து சென்றுகோண்டிருந்திருக்கிறது.

அப்போது எதிர்பாராமல் எங்கிருந்தோ வந்த சிங்கம் ஒன்று, அந்த கூட்டத்திலிருந்த மூன்று வயது சிறுவன் ஒருவனை கழுத்தைக் கவ்வி தூக்கிச் சென்றுள்ளது.

உடனே தனது முதுகுப்பையைத் தூக்கி அந்த மலைச்சிங்கம் என்னும் அந்த விலங்கின் மீது வீசியடித்துள்ளார் அந்த சிறுவனின் தந்தை.

சட்டென குழந்தையை விட்ட அந்த சிங்கம், அந்த பையைத் தூக்கிக்கொண்டு ஒரு மரத்தின்மீது பாய்ந்து ஏறியுள்ளது.

மீட்கப்பட்ட சிறுவன் உடனடியாக மருத்துவமனை ஒன்றிற்கு கொண்டு செல்லப்பட்டுள்ளான்.

சிங்கம் தாக்கியதில், அவனுக்கு கழுத்தில் காயங்கள் ஏற்பட்டபோதிலும், அவனது உடல் நிலை சீராக இருப்பதாக தெரியவந்துள்ளது.

பின்னர் மயக்க ஊசி செலுத்தி அந்த சிங்கத்தை அதிகாரிகள் பிடித்துள்ளனர். வெளியாகியுள்ள புகைப்படங்களில் அந்த சிங்கம் பையை வாயில் கவ்விக்கொண்டு மரம் ஒன்றின் மீது ஏறி நிற்பதைக் காணலாம்.

மேலும் அமெரிக்கா செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்

Latest Offers

loading...