அமெரிக்காவில் துப்பாக்கிசூடு: 2 பேர் பலி... 15 பேர் படுகாயம்

Report Print Vijay Amburore in அமெரிக்கா

அமெரிக்க நகரமான கன்சாஸில் மதுபான கடையில் நடைபெற்ற துப்பாக்கி சூட்டில் 2 பேர் பலியாகியுள்ளதாக செய்தி வெளியாகியுள்ளது.

அமெரிக்க நகரமான கன்சாஸில் ஒரு பட்டிக்கு வெளியே நடந்த துப்பாக்கிச் சூட்டில் இரண்டு பேர் உயிரிழந்துள்ளனர் மற்றும் குறைந்தது 15 பேர் காயமடைந்துள்ளனர். அவர்களில் 3 பேர் ஆபத்தான நிலையில் இருப்பதாக பொலிசார் திங்களன்று தெரிவித்தனர்.

உள்ளூர் நேரப்படி ஞாயிற்றுக்கிழமை இரவு 11:30 மணியளவில் துப்பாக்கிச் சூடு நிகழ்ந்ததாக பொலிஸார் சமூகவலைதளத்தில் தகவல் வெளியிட்டுள்ளனர்.

குழப்பமான சம்பவத்திற்கு பின்னர், கார் பார்க்கில் சுட்டுக் கொல்லப்பட்ட ஒரு பெண்ணின் சடலத்தையும், துப்பாக்கிச் சூடு நடத்தியவர் என்று நம்பப்படும் ஒரு நபரின் உடலையும் பொலிஸார் கண்டுபிடித்தனர்.

துப்பாக்கி சூட்டிற்கான காரணம் குறித்து கண்டறியப்படவில்லை. ஒரு பாதுகாப்பு காவலர் துப்பாக்கி ஏந்தியவரை சுட்டுக் கொன்றார் எனவும், தாக்குதல்தாரி மதுபான கடைக்குள் காத்திருந்த மக்கள் மீது துப்பாக்கிச் சூடு நடத்தினார் என்றும் பொலிஸார் கூறியுள்ளனர்.

தற்போது காயமடைந்த 15 பேரும் சிகிச்சைக்காக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.

மேலும் அமெரிக்கா செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்

Latest Offers

loading...