மகளை கழிப்பறைக்குள் வைத்து மிக மோசமாக கொடுமைப்படுத்திய 38 வயது தாயார்! வெளிவரும் அதிர்ச்சி தகவல்

Report Print Raju Raju in அமெரிக்கா

அமெரிக்காவில் பள்ளி மாணவியை மோசமாக அடித்து கொடுமைப்படுத்திய அவர் தாயார் கைது செய்யப்பட்டுள்ளார்.

அமெரிக்காவின் Louisville நகரை சேர்ந்தவர் லிண்டா கிப்சன் (38). இவரின் மகள் இரு தினங்களுக்கு முன்னர் பள்ளிக்கு புறப்பட்டு கொண்டிருந்தார்.

அப்போது திடீரென ஆக்ரோஷமான லிண்டா அவரின் தலையை கழிப்பறை இருக்கையில் வைத்து முட்டினார்.

பின்னர் மகள் மீது ஏறி உட்கார்ந்து கொண்டு மிக மோசமாக தாக்கினார்.

இதில் மகளின் கை உடைந்துள்ளதோடு உடலின் பல இடங்களில் காயம் ஏற்பட்டுள்ளது.

இது தொடர்பாக வழக்குப்பதிவு செய்த பொலிசார் லிண்டாவை கைது செய்துள்ளனர். அவர் மீது பல்வேறு பிரிவுகளில் வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது.

எதற்காக லிண்டா இவ்வளவு மோசமாக மகளை தாக்கினார் என்பதற்கான காரணம் இன்னும் தெரியாத நிலையில் அது குறித்து அவரிடம் விசாரணை நடத்தப்பட்டு வருகிறது.

மேலும் அமெரிக்கா செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்

Latest Offers

loading...