தாக்குதல் நடத்திய ஈரானுக்கு இதுதான் தண்டனை: டிரம்ப் பேட்டி

Report Print Vijay Amburore in அமெரிக்கா

ஈரான் நடத்திய தாக்குதலுக்கு பதிலளிக்கும் விதமாக கூடுதல் பொருளாதார தடைகளை அமெரிக்கா விதிக்க உள்ளதாக டிரம்ப் கூறியுள்ளார்.

ஈரானின் உயர்மட்ட இராணுவ தளபதி குவாசிம் சுலைமானி கொல்லப்பட்டது தொடர்பாக, இன்று அதிகாலை ஈராக்கில் உள்ள அமெரிக்க இராணுவ தளம் மீது ஈரான் ராக்கெட் வீசி தாக்குதல் நடத்தி பதிலடித்து கொடுத்தது.

இதுதொடர்பாக தற்போது பத்திரிகையாளர்களை சந்தித்த அதிபர் டிரம்ப், அமெரிக்க இராணுவ தளங்களில் ஈரான் ஏவிய 12 ஏவுகணைகள் தோல்வியடைந்துள்ளது. மத்திய கிழக்கில் ஈரானின் கரம் தாழ்ந்துவிட்டது.

அவர்கள் நடத்திய தாக்குதலில் அமெரிக்க வீரர் ஒருவர் கூட காயமடையாததால், மக்கள் மிகவும் நன்றியுள்ளவர்களாகவும் மகிழ்ச்சியாகவும் இருக்க வேண்டும்.

இனி தெஹ்ரானுக்கு எதிராக அமெரிக்க இராணுவ வலிமையைப் பயன்படுத்த விரும்பவில்லை.

ஆனால் அணுசக்தி திட்டத்தை கைவிட்டு, பயங்கரவாதிகளுக்கு ஆதரவளிப்பதை நிறுத்துமாறு கட்டாயப்படுத்தும் முயற்சியில் ஈரானுக்கு புதிய பொருளாதாரத் தடைகளை விதிக்கும்.

சுலைமானி அடுத்த நாள் அமெரிக்க இலக்குகள் மீது தாக்குதல்களை நடத்த திட்டமிட்டிட்டிருந்தார். ஆனால் நாங்கள் அவரை நிறுத்திவிட்டோம்.

ஈரானுடன் கடந்த 2015ம் ஆண்டு ஒபாமாவின் கீழ் கையெழுத்திட்ட அணுசக்தி ஒப்பந்தத்திலிருந்து, ரஷ்யா, சீனா மற்றும் அமெரிக்காவின் ஐரோப்பிய நட்பு நாடுகளை விலகிச் செல்லவும் அவர் அழைப்பு விடுத்தார்.

ஒப்பந்தத்தின் ஒரு பகுதியாக தெஹ்ரானுக்கு பறக்கப்பட்ட பணம் ஒரே இரவில் ஏவப்பட்ட ஏவுகணைகளுக்கு பணம் செலுத்த பயன்படுத்தப்பட்டது என்று கூறினார்.

மேலும் தான் அதிபராக இருக்கும்வரை ஒருபோதும் ஈரான் அணு ஆயுதத்தை பெறவிடமாட்டேன் என்ற உறுதிமொழியை மீண்டும் வலியுறுத்திய டிரம்ப், மத்திய கிழக்கில் அதிக ஈடுபாடு கொள்ள நேட்டோவிற்கு அழைப்பு விடுத்தார்.

ஈரான், நீங்கள் ஒரு பிரகாசமான மற்றும் வளமான எதிர்காலம் வேண்டும் என்று நாங்கள் விரும்புகிறோம் என டிரம்ப் கூறினார்.

"ஐ.எஸ்.ஐ.எஸ் ஈரானின் இயற்கையான எதிரி. ஐ.எஸ்.ஐ.எஸ்ஸை அழிப்பது ஈரானுக்கு நல்லது. இது மற்றும் பிற பகிரப்பட்ட முன்னுரிமைகள் குறித்து நாங்கள் ஒன்றிணைந்து செயல்பட வேண்டும் என பேசியுள்ளார்.

மேலும் அமெரிக்கா செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்

Latest Offers

loading...