தயவு செய்து எங்களை கொன்றுவிடாதீர்கள்... ஈரானிடம் கோரிக்கை வைத்த ஹாலிவுட் நடிகை

Report Print Vijay Amburore in அமெரிக்கா

பிரபல அமெரிக்க நடிகையான Rose McGowan, தயவு செய்து எங்களை கொன்றுவிடாதீர்கள் என ஈரானுக்கு ட்விட்டரில் கோரிக்கை வைத்துள்ளார்.

ஈரானின் உயர்மட்ட இராணுவ தளபதி குவாசிம் சுலைமானி கடந்த சில தினங்களுக்கு முன் ஆளில்லா விமான தாக்குதல் மூலம் கொல்லப்பட்டார். இந்த சம்பவமானது இருநாடுகளுக்கு மத்தியிலும் பெரும் பதற்றத்தை ஏற்படுத்தியுள்ளது.

இதுகுறித்து பல்வேறு அரசியல் தலைவர்களும், பொதுமக்களும் இணையதளங்களில் தங்களுடைய கருத்துக்களை பதிவிட்டு வருகின்றனர்.

அந்த வரிசையில் பிரபல ஹாலிவுட் நடிகையும், சமூக ஆர்வலருமான Rose McGowan தனது ட்விட்டர் பக்கத்தில், ‘அன்புள்ள ஈரான், அமெரிக்கா உங்கள் நாட்டையும், உங்கள் கொடியையும், உங்கள் மக்களையும் அவமதித்துள்ளது. எங்களில் 52% பேர் தாழ்மையுடன் மன்னிப்பு கேட்கிறோம். உங்கள் தேசத்துடன் நாங்கள் அமைதியை விரும்புகிறோம். ஒரு பயங்கரவாத ஆட்சியால் நாங்கள் பிணைக் கைதிகளாக வைக்கப்பட்டுள்ளோம். தப்பிப்பது எப்படி என்று எங்களுக்குத் தெரியாது. தயவுசெய்து எங்களை கொல்ல வேண்டாம்.’ என பதிவிட்டார்.

அதற்கு இணையதளவாசிகளில் சிலர் கடும் எதிர்ப்பு தெரிவித்ததை அடுத்து, ‘நிச்சயமாக சுலைமானி தீய காரியங்களைச் செய்த ஒரு தீய மனிதர். அதற்காக அந்த நேரத்தில் எடுக்கப்பட்ட முடிவு முற்றுப்புள்ளியாக இருக்காது என பதிவிட்டார்.

அதனை தொடர்ந்து மீண்டும் அவர் வெளியிட்ட பதிவில், வரவிருப்பது யுத்தமாக இருக்கலாம் என்பதால் நான் பீதியடைந்துவிட்டேன். மேலும் அமெரிக்க வீரர்கள் கொல்லப்படுவதை நான் விரும்பவில்லை. அதனால் தான் அப்படி பதிவிட்டேன்.

அதிகமான அமெரிக்க வீரர்கள் கொல்லப்படுவதைத் தடுப்பதற்கான சிறந்த வழி, 20 ஆண்டுகளாக இவர்களில் பலரைக் கொன்ற மனிதனை உயிருடன் வைத்திருப்பதுதான்? என குழப்பத்துடன் பதிவிட்டிருந்தார்.

இதேபோல பெரும் குழப்பத்துடன் இருந்த பிரித்தானியாவின் பிரபலமான பத்திரிகையாளர் piers morgan, 5 நாட்களுக்கு பிறகு சுலைமானி கொல்லப்பட்டது குறித்து கருத்து தெரிவித்துள்ளார்.

ஏமாற்றப்பட்ட தாராளவாதிகள் ஆத்திரப்படுவார்கள், ஈரான் பழிவாங்கும், ஆனால் அமெரிக்கா வலுவாக இருக்கிறது. உலகின் மிக ஆபத்தான பயங்கரவாதியை வெளியேற்ற டிரம்ப் எடுத்த முடிவுக்கு நன்றி எனக்கூறியுள்ளார்.

மேலும் அமெரிக்கா செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்

Latest Offers

loading...