அமெரிக்க வீரர்கள் ஈரானின் ஏவுகணை தாக்குதலுக்கு தப்பியது எப்படி?: வெளியான ரகசியம்!

Report Print Balamanuvelan in அமெரிக்கா

தங்களை நோக்கி ஏராளம் ஏவுகணைகள் வருவதை முன்கூட்டியே அறிந்து அமெரிக்க வீரர்கள் பதுங்கு குழிகளுக்குள் பதுங்கிக்கொண்டதாக ஒரு தகவல் வெளியாகியுள்ளது.

வெளி உலகுக்கு அதிகம் தெரியாத மேரிலாண்ட் என்னும் இடத்தில் அமைந்துள்ள தேசிய பாதுகாப்பு ஏஜன்சியின் தளம் ஒன்றுதான் அமெரிக்க வீரர்களுக்கு ஏவுகணைகள் வரும் தகவலை முன் கூட்டியே தெரிவித்ததாம்.

ஏவுகணை பாதுகாப்பு மற்றும் வான்வெளி மையம் (DEFSMAC), சாட்டிலைட்டுகள், ராடார் மற்றும் வெப்பம் அறியும் இயந்திரங்கள் உதவியுடன் ஏவுகணைகள் ஏவப்படுவதை அறிந்து எச்சரிக்குமாம்.

இப்படி சரியான நேரத்தில் அந்த பாதுகாப்பு ஏஜன்சி அளித்த எச்சரிக்கையின் பேரில்தான், ஈராக் முகாமில் தங்கியிருந்த அமெரிக்க வீரர்கள் பதுங்கு குழிகளுக்குள் பதுங்கி தப்பினார்களாம்.

இந்த தகவலை அமெரிக்க ராணுவ அலுவலர் ஒருவர் தெரிவித்துள்ளார். முன்கூட்டியே எச்சரிக்கும் அமைப்பு வேலை செய்துள்ளது என்று அமெரிக்க பத்திரிகை ஒன்றிற்கு அளித்த பேட்டியில் அவர் குறிப்பிட்டுள்ளார்.

அதேநேரத்தில் ஏவுகணைத் தாக்குதலுக்கு முன் தாக்குதல் நடக்க இருப்பது குறித்து தனக்கு ஈரான் தகவல் தெரிவித்ததாக ஈராக் பிரதமர் Adel Abdul Mahdi தெரிவித்துள்ளார்.

ஆனால், அவர் இந்த தகவலை அமெரிக்காவுக்கு தெரிவித்தாரா என்பது குறித்த தகவல்கள் வெளியாகவில்லை.

இந்த செய்திகளுக்கு ஒத்துப்போவது போல், பெண்டகனும் இதுவரை யாரும் உயிரிழந்ததாக தகவல் கிடைக்கவில்லை என்று அறிக்கை ஒன்றில் தெரிவித்துள்ளது குறிப்பிடத்தக்கது.

மேலும் அமெரிக்கா செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்

Latest Offers

loading...