ஈரானின் புராதன சின்னங்கள் மீது தாக்குதல் நடத்த உத்தரவிட்ட டிரம்ப்! பென்டகன் மறுத்தது ஏன்? வெளியான ரகசியம்

Report Print Santhan in அமெரிக்கா

ஈரானின் புரதானச் சின்னங்கள் மீது தாக்குதல் நடத்துங்கள் என்று டிரம்ப் உத்தரவிட்ட நிலையில், அதற்கு இராணுவ தலைமையகம் பென்டகன் ஒத்துழைக்க மறுத்ததாக தகவல் வெளியாகியுள்ளது.

ரானின் புரட்சி இராணுவத்தளபதி சுலைமானியை, கடந்த வாரம் அமெரிக்க ஆளில்லா விமானம் மூலம் தாக்குதல் நடத்தி கொன்றது. இதன் காரணமாக டிரம்ப் அமெரிக்கர்களை தாக்கினால், மீண்டும் பயமின்றி தாக்குதல் நடத்துவோம் என்றும், ஈரானோ இதற்கு எல்லாம் தக்க தருணத்தில் தாக்குதல் நடத்துவோம் எனவும் மாறி, மாறி எச்சரித்து வருகின்றனர்.

இந்நிலையில் ஈரான் நாட்டின் கலாசார மற்றும் புராதனச் சின்னங்கள்மீது தாக்குதல் நடத்த அமெரிக்க ஜனாதிபதி டிரம்ப் திட்டமிட்டதாகவும், அதற்கு இராணுவத் தலைமையகமான பென்டகன் ஒத்துழைக்க மறுத்ததாகவும் தகவல் வெளியாகியுள்ளது.

ஜனாதிபதியே உத்தரவிட்டாலும், விதிகளை மீறி செயல்பட முடியாது என்று டிரம்பிற்கு பென்டகன் உணர்த்தியதாக கூறப்படுகிறது.

குவாசிம் கொலை செய்யப்பட்ட பின்னர் டிரம்ப், அமெரிக்கர்கள் மீது தாக்குதல் நடத்தினால், ஈரானின் முக்கியமான 52 இடங்களை தயங்காமல் தாக்குவோம் என்று எச்சரித்திருந்தார்.

இது குறித்து அமெரிக்க பாதுகாப்புத்துறை செயலர் மார்க் எஸ்பர் கூறுகையில், சர்வதேச போர் விதிமுறைகளை மீறி எங்களால் செயல்பட முடியாது. குடிமக்கள் மற்றும் வழிபாட்டுத் தளங்கள் மீதும் தாக்குதல் நடத்த முடியாது என்று கூறியுள்ளார்.

டிரம்போ,எங்கள் மக்களை அவர்கள் கொல்கிறார்கள். சாலையோரத்தில் வெடிகுண்டு வைக்கிறார்கள். அமெரிக்கர்களைப் பிடித்துத் துன்புறுத்துகிறார்கள். ஆனால், நாங்கள் அவர்களின் கலாசார சின்னங்கள் மீது வெடிகுண்டு வீசக்கூடாதா என்று கேள்வி எழுப்பினார்.

கடந்த 1945-ஆம் ஆண்டு ஹேக் நகரில் நடந்த மாநாட்டில், எந்த ஒரு நாட்டின் கலாசார சின்னங்கள் மீதும் தாக்குதல் நடத்தக்கூடாது என்ற போர் விதி வகுக்கப்பட்டுள்ளது. இந்த விதி தெரியாமல் டிரம்ப் பென்டகனுக்கு உத்தரவு பிறப்பித்துள்ளதாக கூறப்பட்டது.

ஆனால், வெள்ளை மாளிகை ஆலோசகர் கெல்லியானே கானே, அமெரிக்க ஜனாதிபதி டிரம்ப் கலாச்சார பகுதிகளைத் தாக்க உத்தரவிடவில்லை. நாங்கள் ஏன் தாக்கக்கூடாது என்ற கேள்வியை மட்டுமே எழுப்பினார். ஈரான், தங்கள் கலாசார பகுதிகளுக்குள் இராணுவ முகாமையும் அமைத்துள்ளது என்று தெரிவித்துள்ளார்.

GETTY IMAGES

மேலும், மேற்கு ஆசியாவைப் பொறுத்தவரை, ஈரான் கலாசார பெருமை வாய்ந்த நாடு. ஈரானில் 100- க்கும் மேற்பட்ட பழம் பெருமை வாய்ந்த கலாசார மற்றும் புராதனச் சின்னங்கள் உள்ளன.

அவற்றில் 12 புராதனச் சின்னங்கள் யுனெஸ்கோ அமைப்பால் பாதுகாக்கப்பட்ட பகுதியாக அறிவிக்கப்பட்டவை. புராதனச் சின்னங்கள்மீது குண்டு வீசினால், போர்க் குற்றமாகக் கருதப்படும். கலாசார சின்னங்களைத் தாக்கினால், பாமியான் சிலைகளைத் தகர்த்த தலிபான்களுக்கும் அமெரிக்க ராணுவத்துக்கும் என்ன வித்தியாசம் என்கிற கேள்வியும் எழுந்துள்ளது.

GETTY IMAGES

யுனஸ்கோ அமைப்பு, கடந்த 1972-ஆம் ஆண்டு ஐ.நா ஒப்பந்தப்படி, கலாசார மற்றும் புராதனச் சின்னங்களைப் பாதுகாக்கும் ஒப்பந்தத்தில் இரான் மற்றும் அமெரிக்க நாடுகள் கையொப்பமிட்டுள்ளதாக நினைவுபடுத்தியுள்ளது குறிப்பிடத்தக்கது.

மேலும் அமெரிக்கா செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்

Latest Offers

loading...