தினமும் 22கிமீ நடந்தே வேலைக்கு சென்ற இளம்பெண்: வாடிக்கையாளர் கொடுத்த ஆச்சர்ய பரிசு

Report Print Vijay Amburore in அமெரிக்கா

உணவகம் ஒன்றில் வேலை செய்துவந்த இளம்பெண் தினமும் 22கிமீ நடந்து வருவதை பார்த்த ஒரு வாடிக்கையாளர், புதிதாக கார் ஒன்றினை பரிசாக கொடுத்துள்ளனர்.

அமெரிக்காவின் டெக்ஸாஸ் மாகாணத்தை சேர்ந்த அட்ரியன்னா எட்வர்ட்ஸ் என்கிற இளம்பெண் கால்வெஸ்டன் நகரில் உள்ள ஒரு Denny உணவகத்தில் வேலை செய்துவந்துள்ளார்.

இதற்காக இவர் தினமும் 22கிமீ தூரத்திற்கு நடக்க வேண்டியிருந்துள்ளது. ஏழ்மையின் கொடுமையால் ஒரு கார் வாங்குவதற்காகவும், அட்ரியன்னா சிறிது சிறிதாக பணம் சேர்த்து வந்துள்ளார்.

இந்த நிலையில் செவ்வாய்க்கிழமை காலை வழக்கம் போல அட்ரியன்னா, தனது வேலைக்கு சென்று, அங்கிருந்த ஒரு தம்பதிக்கு உணவு பரிமாறியுள்ளார்.

அப்போது அட்ரியன்னாவின் ஏழ்மை நிலை குறித்து கேட்டறிந்த பெயர் வெளியிட விரும்பாத அந்த தம்பதி, உணவு சாப்பிட்டு முடிந்த பின் அங்கிருந்து கிளம்பிவிட்டனர்.

ஆனால் அடுத்த அடுத்த சில நிமிடங்களில் 2011 Nissan Sentra என்கிற புதிய கார் ஒன்றுடன் உணவகத்திற்கு திரும்பிய தம்பதி, அட்ரியன்னாவிடம் பரிசாக கொடுத்துள்ளனர்.

ஆரம்பத்தில் இதனை நம்பாத அட்ரியன்னா, இது ஒரு நகைச்சுவை, ஏமாற்று வேலையாக இருக்கலாம் என நினைத்துள்ளார்.

சிறிது நேரம் கழித்து உண்மையிலேயே அவருக்கு தான் அந்த பரிசு என்பது தெரியவந்ததும், மகிழ்ச்சியில் கண்ணீர் வடித்துள்ளார்.

இதனை பரிசாக அளித்த அந்த தம்பதி, எந்த ஒரு நன்றிக்கடனையும் அட்ரியன்னாவிடம் இருந்து எதிர்பார்க்கவில்லை. மாறாக, அட்ரியன்னா வாழ்க்கையில் முன்னேறியதும் கஷ்டப்படுபவர்களுக்கு உதவுமாறு மட்டும் கோரிக்கை வைத்துள்ளனர்.

தற்போது புதிய கார் கிடைத்திருப்பதன் மூலம் அட்ரியன்னாவின் 5 மணி நேர நடைப்பயணம் இனி 30 நிமிடங்களாக குறைந்துவிடும் என்றும், விரைவில் அவர் கல்லூரி வாழ்க்கையையும் துவங்கலாம் எனவும் கூறப்படுகிறது.

மேலும் அமெரிக்கா செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்