ஆண்டுக்கு ஒரு டொலர்... இன்றோ கோடீஸ்வரர்! டிரம்பை வீழ்த்த பணத்தை அள்ளி வீசும் உள்ள இந்த தொழிலதிபர் யார்?

Report Print Santhan in அமெரிக்கா

அமெரிக்க ஜனாதிபதி தேர்தல் அடுத்த ஆண்டு நடைபெறவுள்ள நிலையில், இந்த தேர்தலில் பெரும் கோடீஸ்வரர் டிரம்பை எதிர்த்து மைக்கேல் ப்ளூம்பெர்க் களமிறங்கவுள்ளார்.

அமெரிக்காவில் ஒவ்வொரு நான்கு ஆண்டுக்கு ஒரு முறை ஜனாதிபதி தேர்தல் நடைபெற்று வருகிறது. அதே போன்று அமெரிக்காவில் இரண்டு முறை ஜனாதிபதியாக தெரிவு செய்யப்பட்ட நபர், அடுத்து ஜனாதிபதி தேர்தலில் நிற்க முடியாது.

இந்நிலையில் கடந்த 2017-ஆம் ஆண்டு முதல் முறையாக ஜனாதிபதியான டிரம்ப், மீண்டும் அடுத்த ஆண்டு நடைபெறவுள்ள ஜனாதிபதிக்கான தேர்தலில் நிற்கிறார்.

(Photo by Ron Sachs-Pool/Getty Images)

இதையடுத்து இவரை எதிர்த்து பெரும் கோடீஸ்வரரான மைக்கேல் ப்ளூம்பெர்க் தேர்தலில் களத்தில் குதிக்கிறார். யார் இந்த பளூம் பெர்க், திடீரென்று அமெரிக்க தேர்தலில் களமிறங்க என்ன காரணம் என்பது குறித்து தகவல் வெளியாகியுள்ளது.

ப்ளூம்பர்க் டி.வி-யின் உரிமையாளர் தான் ப்ளூம்பெர்க். அமெரிக்காவின் நியூயார்க் நகரின் வால் ஸ்ட்ரீட்டில் உள்ள வங்கி ஒன்றில் மாதம் 9,000 அமெரிக்க டொலர்கள் சம்பளத்துக்கு வேலைக்குச் சேர்ந்த ப்ளூம்பெர்க் இன்று கிட்டத்தட்ட 4 லட்சம் கோடி ரூபாய்க்கு சொந்தக்காரர் ஆவார்.

ஜனநாயகக் கட்சியில் அரசியல் பிரவேசத்தைத் தொடங்கிய, ப்ளூம்பெர்க் அதன் பின் குடியரசு கட்சியில் சேர்ந்தார். இவர் கடந்த 2002-ஆம் ஆண்டு நியூயார்க் நகர மேயர் தேர்தலில் போட்டியிட்டு வெற்றி பெற்றார்.

Drew Angerer/Getty Images

இதனால் 2002-ஆம் ஆண்டு முதல் 2013-ஆம் ஆண்டு வரை நியூயார்க் நகர மேயராகவும் அவர் இருந்தார். அப்போது, ஆண்டு ஒன்றுக்கு 1 டொலர் தான் சம்பளம் வாங்கியதாக கூறப்படுகிறது.

மேயர் பதவியிலிருந்து விலகிய பிறகு, மீண்டும் தாய்க்கட்சியான ஜனநாயகக் கட்சியில் சேர்ந்து கொண்ட இவர், அரசியலை ஒரு பகுதியாக வைத்துக்கொண்டு, தொழிலில் அதிக கவனம் செலுத்தினார்.

அமெரிக்க மக்கள் ஜனாதிபதி தேர்தலில் மிகுந்த கவனத்துடன் இருப்பார்கள். பெரும் பணக்காரர்களை ஜனாதிபதியாக தெரிவு செய்ய தயக்கம் காட்டுவார்கள்.

ஏனெனில் பணக்காரர்கள் பெரும்பாலும், அவர்கள் தொழிலையே அதிகம் கவனம் செலுத்துவார்கள், அதற்கே சரியான நேரம் இருக்கும், இதில் எங்கு அவர்கள் நம்மை பார்ப்பார்கள் என்ற காரணத்திற்காக அமெரிக்க மக்கள் தயக்கம் காட்டுவார்கள்.

ஆனால் அதை எல்லாம் உடைத்து கோடீஸ்வரரான டிரம்ப் அமெரிக்க ஜனாதிபதியானார். இதன் காரணமாகவே ப்ளூபெர்க அடுத்த ஆண்டு நடைபெறும் தேர்தலில் களம் இறங்க உள்ளார்.

ப்ளூம்பெர்க், அமெரிக்காவின் 9-வது பெரும் பணக்காரர். போர்ப்ஸ் செல்வந்தர்கள் பட்டியலில், உலகளவில் 14-வது இடத்தில் உள்ளார்.

இவர் டிரம்ப்பைவிட 17 மடங்கு செல்வம் இவரிடத்தில் கொட்டிக்கிடக்கிறது. அமெரிக்க ஜனாதிபதி தேர்தலில் ஜனநாயகக் கட்சியின் அதிபர் வேட்பாளர்கள் பட்டியலில் துணை ஜனாதிபதி ஜோ பிடென் உள்ளிட்ட 17 பேரின் பெயர்கள் இருக்கின்றன.

கடந்த ஞாயிற்றுக்கிழமை திடீரென்று, ஜனநாயகக் கட்சியின் சார்பில் ஜனாதிபதி தேர்தலில் போட்டியிடப்போவதாக ப்ளூம்பெர்க் அறிவித்தார்.

(Brendan Smialowski/AFP/Getty Images)

தொடர்ந்து, அலபாமா மாகாணத்தில் ஜனநாயகக் கட்சியின் வேட்பாளரப் போட்டியிட ஆவணங்களையும் சமர்ப்பித்துள்ளார்.

ஜனநாயகக் கட்சி சார்பில் இவர் போட்டியிடும் பட்சத்தில், வரும் அமெரிக்க ஜனாதிபதி தேர்தலில் அனல் வீசும் எனவும், ப்ளூம் பெர்க் கண்டிப்பாக பணத்தை அள்ளி வீசுவார் என்ற பேச்சும் அடிபட்டுள்ளது.

தற்பேதைய ஜனநாயகக் கட்சி வேட்பாளர்களில் தன்னைத் தவிர்த்து வேறு யாரும் டிரம்பிற்கு நெருக்க கொடுக்க முடியாது என்பதில் ப்ளூம் பெர்க் தீர்க்கமாக இருக்கிறாராம்.

மேலும் அமெரிக்க ஜனாதிபதி தேர்தலைப் பொறுத்தவரை, மக்கள் நேரடியாக ஜனாதிபதியை தெரிவு செய்தாலும் மாகாண உறுப்பினர்களின் ஆதரவும் கிடைக்க வேண்டும். அமெரிக்காவில் 50 மாகாணங்கள் உள்ளன. 538 மாகாண உறுப்பினர்கள் தெரிவு செய்யப்படுவார்கள். பெரிய மாகாணத்துக்கு அதிக உறுப்பினர்கள் கிடைப்பார்கள். இவர்களை எலக்டர்கள் என்று சொல்வார்கள்.

அதன்படி, ஒரு மாகாணத்தில் எந்த ஜனாதிபதி வேட்பாளருக்கு அதிக வாக்குகள் கிடைக்கிறதோ அந்த மாகாணத்தின் அனைத்து எலக்டர்களின் வாக்குகளும் அந்த வேட்பாளருக்குப் போய்விடும். சில மாகாணங்களில் மட்டுமே விகிதாச்சார முறை பின்பற்றப்படுகிறது. எனவே, மக்கள் ஆதரவு பெற்றாலும் 270 எலக்டர்களின் ஆதரவு பெறமுடிந்தால் மட்டுமே ஜனாதிபதியாக முடியும்.

பொதுவாக அமெரிக்கா தேர்தலில் பிரசார செலவுக்கு பல கோடிகள் தேவைப்படும், இதனால் வேட்பாளர்கள் தங்களுக்கான மக்களிடமிருந்து நிதி திரட்டி கொள்வார்கள், ஆனால் ப்ளும்பெர்க் மக்களிடமிருந்து நிதி திரட்டப்போவதில்லை என்று அறிவித்துள்ளார்.

77 வயதான ப்ளூம்பெர்க் தன் பிரசாரத்தைத் தொடங்கியதும் ப்ளூம்பெர்க் எல்.பி நிறுவனத்தின் தலைவர் பதவியிலிருந்து விலகிவிட்டார். பிரசாரத்திற்கு என் சொந்தப் பணத்தில் பிரசாரம் செய்யப் போகிறேன், குறிப்பாக தொலைக்காட்சி விளம்பரத்துக்காக மட்டும் 37 மில்லியன் அமெரிக்க டொலர்கள் செலவிட ப்ளூம்பெர்க் திட்டமிட்டுள்ளதாக அங்கிருக்கும் உள்ளூர் ஊடகங்கள் தெரிவித்துள்ளன.

மேலும் அமெரிக்கா செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்