நண்பர்களுடன் சுற்றிவிட்டு தாமதமாக வந்த பெண்: எடுத்த முட்டாள்தனமான முடிவால் ஏற்பட்ட பிரச்னை!

Report Print Balamanuvelan in அமெரிக்கா

நண்பர்களுடன் வெளியில் சுற்றிவிட்டு வீட்டுக்கு தாமதமாக வந்த இளம்பெண் ஒருவர், பெற்றோருக்கு தெரியாமல் வீட்டுக்குள் நுழைய எடுத்த முடிவு தொலைக்காட்சியில் ஊருக்கே போட்டு காட்டப்பட்டது.

அரிசோனாவைச் சேர்ந்த ஒரு 17 வயது இளம்பெண், நண்பர்களுடன் ஊர் சுற்றிவிட்டு வீடு திரும்ப தாமதமாகிவிட்டிருக்கிறது.

வீட்டுக்கு தெரிந்தால் பெற்றோர் திட்டுவார்கள் என்று பயந்த அந்த இளம்பெண், வீட்டின் மேலுள்ள புகைப்போக்கி வழியாக வீட்டுக்குள் நுழைய முடிவு செய்திருக்கிறார்.

அவரது தோழியான யாஸ்மின் என்ற பெண் வெளியே நிற்க, இந்த பெண் புகைப்போக்கிக்குள் இறங்கியிருக்கிறார்.

புகைப்போக்கிக்குள் சென்ற பிறகுதான் தெரிந்திருக்கிறது, புகைப்போக்கியின் மறுமுனை மூடப்பட்டுள்ள விடயம்.

வீட்டுக்குள்ளும் இறங்க முடியாமல் மீண்டும் மேலேயும் ஏற முடியாமல் சிக்கிக்கொண்ட அந்த பெண், வெளியே நின்ற யாஸ்மினை அழைத்து அவசர உதவி எண்ணை அழைக்கும்படி சத்தமிட்டிருக்கிறார்.

உடனே யாஸ்மின் 911ஐ அழைக்க, தீயணைப்பு வீரர்கள் வந்திருக்கிறார்கள். ஏற்கனவே ஒன்றரை மணி நேரம் புகைப்போக்கிக்குள் சிக்கியிருந்த நிலையில், தீயணைப்பு வீரர்களுக்கு அந்த பெண்ணை மீட்க மேலும் 40 நிமிடங்கள் பிடித்திருக்கிறது.

வெளியே வரும்போதே வெட்கத்தில் சிரித்துக்கொண்டே வரும் அந்த பெண்ணைப் பார்க்கும்போதே, அவருக்கு பிரச்னை ஒன்றுமில்லை என்பது தெரிகிறது.

பெற்றோருக்கு தெரியாமல் வீட்டுக்குள் நுழைய நினைத்த அந்த இளம்பெண், பின்னர் தனது விடயம் ஊருக்கே தொலைக்காட்சியில் ஒளிபரப்பப்பட, வெட்கத்தில் திணறிப்போயிருக்கிறார்.

அப்புறம் என்ன, வெளியே போயிருந்த பெற்றோர் வீடு திரும்ப, ஏற்கனவே இருந்த கோபம் போதாதென்று, ருத்ர தாண்டவம் ஆடிவிட்டார்களாம்!

மேலும் அமெரிக்கா செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்