மரணப்படுக்கையில் முதியவர்... பீர் போத்தல்களுடன் கடைசி ஆசையை நிறைவேற்றிய மகன்கள்

Report Print Arbin Arbin in அமெரிக்கா

அமெரிக்காவின் விஸ்கொன்சின் மாகாணத்தில் பீர் போத்தல்களுடன் தந்தையின் கடைசி ஆசையை மகன்கள் நிறைவேற்றிய புகைப்படம் இணையத்தில் தற்போது பலரது கவனத்தையும் ஈர்த்து வருகிறது.

விஸ்கொன்சின் மாகாணத்தை சேர்ந்த ஆடம் ஸ்கெம் என்பவர் தமது சமூக வலைதள பக்கத்தில் புகைப்படம் ஒன்றை பதிவிட்டு,

தமது தாத்தா அவரது மகன்களுடன் தனது கடைசி இரவை செலவிட்டதாக குறிப்பிட்டுள்ளார்.

அதில், தனது தாத்தா இன்று காலமானார் என குறிப்பிட்ட ஆடம், நேற்று இரவு அவர் தமது மகன்களுடன் பீர் அருந்த ஆசைப்பட்டதாகவும், அதை அவரின் மகன்கள் நிறைவேற்றியதாகவும் பகிர்ந்துக் கொண்டுள்ளார்.

குறித்த புகைப்படத்தில் ஆடத்தின் தாத்தா மருத்துவமனை படுக்கையில் இருக்கிறார். அவரை சுற்றி பீர் போத்தல்களுடன் சிரித்த முகத்துடன் அவரது நான்கு மகன்கள் நின்றுள்ளனர்.

இந்த புகைப்படத்தை பார்த்த ஒருவர், தாமும் மரணப் படுக்கையில் இருந்த தமது தந்தையுடன் கடந்த மே மாதம் பீர் அருந்தியதாக குறிப்பிட்டுள்ளார்.

மேலும் அமெரிக்கா செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்