இளம்பெண் பாழடைந்த பாடசாலை வளாகத்தில் சடலமாக மீட்பு: அம்பலமான அதிர்ச்சி பின்னணி

Report Print Arbin Arbin in அமெரிக்கா

அமெரிக்காவில் கடந்த சில நாட்களாக மாயமான இளம்பெண் ஒருவர் பாழடைந்த பாடசாலை வளாகத்தில் சடலமாக மீட்கப்பட்ட சம்பவம் அதிர்வலைகளை ஏற்படுத்தியுள்ளது.

வடமேற்கு இந்தியானா மாகாணத்தில் உள்ள Portage பகுதியை சேர்ந்தவர் 27 வயதான Adriana Saucedo.

கடந்த செவ்வாய் முதல் மாயமான இவரை கேரி பகுதியில் உள்ள பாழடைந்த பாடசாலை வளாகத்தில் இருந்து துப்பாக்கியால் கொல்லப்பட்ட நிலையில் மீட்டுள்ளனர்.

இந்த விவகாரம் தொடர்பில் அவரது பேஸ்புக் நண்பர்கள் இருவரை பொலிசார் கைது செய்துள்ளனர். கைதான இருவருக்கும் 16 மற்றும் 17 வயது என தெரியவந்துள்ளது.

கொள்ளை சம்பவத்தினிடையே இளம்பெண் அட்ரியானா கொல்லப்பட்டிருக்கலாம் என பொலிசார் சந்தேகம் தெரிவித்துள்ளனர்.

குறித்த பேஸ்புக் நண்பர்களிடம் இருந்து மரிஜுவானா வாங்கும் பொருட்டு அட்ரியானா தமது குடியிருப்பில் இருந்து காரில் சென்றதாக கூறப்படுகிறது.

இந்த விவகாரம் தொடர்பில் மூன்றாவது இளைஞரை பொலிசார் தேடி வருகின்றனர். அட்ரியானா கொல்லப்பட்டது, இந்த மூவரில் ஒருவரது வாகனத்துக்குள் வைத்தாக இருக்கலாம் என பொலிசார் தெரிவித்துள்ளனர்.

கொலைக்கு பின்னர் கேரியில் உள்ள பாழடைந்த பாடசாலை வளாகத்தில் கைவிட்டு சென்றுள்ளனர். குறித்த பாடசாலையானது 2005 ஆம் ஆண்டு முதல் பயன்பாட்டில் இல்லை என கூறப்படுகிறது.

கேரி பொலிசார் சிறப்பு குழு அமைத்து மேற்கொண்ட விசாரணையின் முடிவிலேயே அட்ரியானாவின் சடலத்தை கண்டுபிடித்துள்ளனர்.

கைதான இருவரும் சிறார்கள் என்பதால் அவர்கள் தொடர்பில் எந்த தகவலையும் வெளிப்படுத்த பொலிசார் மறுத்துள்ளனர்.

மேலும் அமெரிக்கா செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்