ஒரே இரவில் ஐந்து மில்லியன் ரசிகர்களின் உள்ளங்களை கொள்ளையடித்த ஒரு இளம்பெண்!

Report Print Balamanuvelan in அமெரிக்கா

டிக் டாக் வீடியோக்களில் இடம்பெற்று ஒரு பெண், ஒரே நாளில் ஐந்து மில்லியன் ரசிகர்களின் உள்ளங்களை கொள்ளையடித்திருக்கிறார்.

15 வயதேயான Charli D'amelioவுக்கு எல்லா ஆண்களும் சந்திக்க விரும்பும் டிக் டாக் பிரபலம் என்ற பெயர் கிடைத்துள்ளது.

சிறந்த நடனக் கலைஞரான Charli, தனது நடன கிளிப்கள் மூலம் மக்களைக் கவர்ந்துள்ளார்.

சமீபத்தில் தனது ரசிகர்களை நேரில் சந்திக்கும் நிகழ்ச்சி ஒன்றை Charliயின் குடும்பத்தார் ஏற்பாடு செய்ய, 10 வயது பையன்கள் முதல் அவரை சந்திப்பதற்காக பணம் கொடுக்க தயாராக இருந்தது தெரியவந்தது.

என்னை விட வயதில் பெரிவர்களும் என்னை விரும்புவதாக தெரிவிப்பது எனக்கே ஒரு மாதிரியாக இருக்கிறது என்று வெட்கத்தில் நெளிகிறார் Charli.

ஒரு 15 வயது பெண்ணின் தோற்றத்தையும் அழகையும் குறித்து ஆண்களும் பெண்களும் வர்ணிக்கிறார்கள் என்கிறார் அவர்.

இன்னொரு பக்கம், இந்த புகழ் வெறும் பேரை மட்டுமல்ல, பணத்தையும் Charliக்கு பெற்றுத்தரும் என்பது குறிப்பிடத்தக்க விடயமாகும்.

மேலும் அமெரிக்கா செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்