ஆட்டுக்குடலுடன் விமானம் ஏற முயன்ற நபர்: சோதித்த பொலிசாருக்கு சிக்கியது?

Report Print Balamanuvelan in அமெரிக்கா

அமெரிக்காவில் விமானம் ஏற முயன்ற பயணி ஒருவரின் உடைமைகளை சோதித்தபோது, அழுகும் நிலையில் ஆட்டுக்குடலை அவர் ஒரு பொட்டலத்தில் வைத்திருப்பது தெரியவந்தது.

கலிபோர்னியாவிலிருந்து 140 டொலர்களுக்கு அந்த ஆட்டுக்குடலை தான் வாங்கியதாக தெரிவித்த அலாஸ்காவைச் சேர்ந்த Cenen Placencia (71) என்ற அந்த நபர், தான் சமைப்பதற்காக அதை வாங்கிச் செல்வதாக தெரிவித்தார்.

அந்த இறைச்சி உறைந்த நிலையில் இருக்கவே அதை உறைநிலையிலிருந்து அறைவெப்பநிலைக்கு கொண்டுவர அதிகாரிகள் முயன்றனர்.

அப்போது அந்த இறைச்சியிலிருந்து அழுகிய வாடை வீச, அதனுள் என்ன இருக்கிறது என்பதைக் கண்டறிய பொலிசார் மோப்ப நாய்களை வரவழைத்துள்ளனர்.

மோப்ப நாய்கள் இறைச்சி வாடையையும் மீறி, அதில் போதைப்பொருள் இருப்பதைக் கண்டுபிடித்தன.

உடனே தான் இறைச்சி மட்டுமே வாங்கியதாகவும், தானே பொட்டலமிட்டதாகவும், அதற்குள் போதைப்பொருள் எப்படி வந்தது என்பது தெரியவில்லை என்றும் கூறினார் Cenen.

அவரைக் கைது செய்த பொலிசார் அவர் வீட்டை சோதனையிட்டபோது, இறைச்சிக்குள் இருந்த அதே வகை போதைப்பொருட்கள் அவரது வீட்டிலும் இருந்தது கண்டுபிடிக்கப்பட்டது. Anchorageஇலுள்ள சிறையில் அடைக்கப்பட்டுள்ளார் Cenen.

மேலும் அமெரிக்கா செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்