அழகான குழந்தைக்கு தந்தையான திருநங்கை! என் மனைவிக்கு நன்றி கடன் பட்டுள்ளேன் என உருக்கம்

Report Print Raju Raju in அமெரிக்கா

அமெரிக்காவை சேர்ந்த திருநங்கை ஒருவர் சோதனை குழாய் மூலம் தனது கரு முட்டையை மனைவி வயிற்றில் சுமக்க வைத்து குழந்தை பெற்று கொண்டுள்ளார்.

Virginia மாகாணத்தை சேர்ந்தவர் செத் மார்லவ் (41). இவர் பிறக்கும் போது ஆணாக பிறந்தாலும் கடந்த 2003-ல் உடலில் ஏற்பட்ட மாற்றத்தை தொடர்ந்து திருநங்கையாக மாறினார்.

இந்நிலையில் லியா என்ற பெண்ணுடன் மார்லவுக்கு திருமணம் நடந்தது.

இந்நிலையில் தம்பதிக்கு குழந்தை பெற்று கொள்ள வேண்டும் என ஆசை ஏற்பட்டது.

ஆனால் திருநங்கையான மார்லவால் இயற்கையாக அது முடியாது என்பதால் நவீன மருத்துவ முறையில் மனைவியுடன் சேர்ந்து குழந்தை பெற முயன்றார்.

அதன்படி மார்லவின் கருமுட்டை, தானம் கொடுக்கப்பட்ட ஒருவரின் உயிரணுக்களுடன் ஒன்று சேர்க்கப்பட்டது.

பின்னர் உருவாக்கப்பட்ட கருவை மார்லவின் மனைவி லியா வயிற்றில் சுமந்தார்.

இதை தொடர்ந்து கடந்த 2015 அக்டோபர் மாதம் மார்லவ் - லியா தம்பதிக்கு அழகான ஆண் குழந்தை பிறந்தது.

குழந்தைக்கு ஆர்லோ என பெயர் வைக்கப்பட்டது. இது குறித்து மார்லவ் கூறுகையில், ஆர்லோவுக்கு தற்போது ஐந்து வயதாகிறது.

எங்களுக்கு குழந்தை பிறந்தது பெரிய அதிர்ஷ்டம் மற்றும் அற்புதம் என்றே கருதுகிறேன். என் வாழ்க்கையில் உடல் ரீதியாகவும், மன ரீதியாகவும் அதிகம் கஷ்டப்பட்டுள்ளேன்.

எங்களுக்கு அழகான மகன் உள்ளது பெரும் மகிழ்ச்சியளிக்கிறது, இதற்காக நான் என் மனைவிக்கு நன்றி கடன் பட்டுள்ளேன்.

எனக்கு குறைபாடு இருப்பதாக அவள் என்றைக்கும் என்னை உணர வைத்ததில்லை என நெகிழ்ச்சியுடன் கூறியுள்ளார்.

மேலும் அமெரிக்கா செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்