கணவனின் மூளையை திருடிவிடுவார்கள்: உடலை 11 மாதங்கள் மறைத்து வைத்திருந்த மனைவி கைது!

Report Print Balamanuvelan in அமெரிக்கா

இறந்த தனது கணவனின் உடலை மருத்துவர்கள் ஆராய்ச்சிக்காக எடுத்துக்கொள்வார்கள் என்று பயந்து, 11 மாதங்கள் குளிர் பதன பெட்டிக்குள் மறைத்து வைத்திருந்த மனைவி கைது செய்யப்பட்டுள்ளார்.

அமெரிக்காவின் Missouriஐச் சேர்ந்த Paul Barton, சென்ற ஆண்டு டிசம்பர் மாதம் மரணமடைந்தார்.

அவரது மனைவியான Barbara Watters (67), தனது கணவனின் உடலை தனது வீட்டிலுள்ள குளிர் பதன பெட்டி ஒன்றிற்குள் மறைத்து வைத்திருக்கிறார்.

பின்னர் யாரோ ஒருவர், Bartonஇன் உடல் அவரது மனைவியின் படுக்கையறையில் குளிர் பதன பெட்டி ஒன்றிற்குள் வைக்கப்பட்டிருப்பதாக பொலிசாருக்கு துப்புக் கொடுத்ததன் பேரில், பொலிசார் சோதனை மேற்கொண்டு அவரது உடலைக் கைப்பற்றியுள்ளனர்.

ஏன் அப்படி செய்தீர்கள் என்று கேட்டதற்கு, தன் கணவர் அபூர்வ நோய் ஒன்றினால் பாதிக்கப்பட்டு உயிரிழந்ததாகவும், அதனால் அவரது மூளையை மருத்துவர்கள் ஆராய்ச்சிக்காக எடுத்துக்கொள்வார்கள் என தான் பயந்ததாகவும் Barbara தெரிவித்தார்.

தனது கணவனின் உடலை யாரும் எடுத்துக்கொள்ளக்கூடாது என்பதற்காகவே, அவரது உடலை மறைத்து வைத்ததாகவும் தெரிவித்துள்ளார் அவர்.

ஆனால் மேலை நாடுகளில் இறந்த உடலை உரிய முறையில் மரியாதையுடன் நடத்தாதது குற்றம் என்பதால், Barbara சிறைக்கு செல்லவேண்டி வரலாம்.

Barbara கணவர் உயிரோடிருந்தவரை அவரை நன்றாக கவனித்துக்கொண்டுள்ளார் என்பது நிரூபிக்கப்பட்டுள்ள நிலையில், அவரது உடலை மறைத்ததற்காக அவர் ஒருவேளை நான்காண்டுகள் வரை சிறை செல்ல நேரிடலாம்.

மேலும் அமெரிக்கா செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்