நண்பர்கள் துஷ்பிரயோகம் செய்வதை பார்த்து கணவர் சிரித்தார்... அதனால்? 3 குழந்தைகள் தாய் கண்ணீர்

Report Print Santhan in அமெரிக்கா

கணவனை கொலை செய்து சிறை தண்டனை அனுபவித்து வரும் மனைவி அவரை ஏன் கொலை செய்தேன், அவரால் அனுபவித்த கொடுமை என்ன என்பதை கூறியுள்ளார்.

அமெரிக்காவை சேர்ந்தவர் Linda Couch. இவர் தன்னுடைய இளம் வயதில் Walter என்பவரை ஒரு திருமண வரவேற்பில் சந்தித்துள்ளார். அதன் பின் அவரை காதலித்த Linda Couch தன்னுடைய 16 வயதில் திருமணம் செய்து கொண்டார்.

தற்போது கணவரை கொலை செய்த குற்றத்திற்காக ஆயுள்தண்டனை கைதியாக இருக்கும், இவர் கணவனின் உண்மை முகத்தை அங்கிருக்கும் தொலைக்காட்சி சேனலுக்கு பேட்டியளித்துள்ளார்.

திருமணத்திற்கு பின் எங்கள் வாழ்க்கை நன்றாகவே சென்று கொண்டிருந்தது. நான் கர்ப்பமானேன் அவரின் இன்னொரு முகத்தை பார்க்க முடிந்தது.

கர்ப்பமாக இருக்கிறேன் என்று கூட பார்க்காமல், மாடியில் இருந்து என்னை தள்ளிவிட்டார். அதன் பின் பல சிரமங்களை சந்தித்து முதல் குழந்தை பிறந்தது.

(Image: A+E Network)

அந்த குழந்தைக்கு Roxanne என்று பெயர் வைத்தோம், அப்போது வீட்டிற்கு வந்தவுடன், குழந்தையை நீ தான் பார்த்து கொள்ள வேண்டும் என்று கூறினார்.

பல இன்னல்களை அவரால் சந்தித்தேன், அவரிமிருந்து தப்பிப்பாதாக, கல்லூரியில் சேரலாம் என்று முடிவெடுத்தேன், ஆனால் அதையும் அவர் நிறுத்தில் வீட்டோடு இருக்க வைத்துவிட்டார்.

எப்போது அவர் தன் நண்பர்களுடன் வெளியில் சென்று வருவார். அப்படி நண்பர்களுடன் சென்று வந்த போது, அவரும், நண்பர்களும் வீட்டிற்கு வந்தனர்.

நான் படுக்கையறையில் தூங்கியிருந்தேன். என்னை எழுப்பிய அவர்கள் என்னை பாலியல் வன்கொடுமை செய்தனர். இதைக் கண்ட என் கணவன் சிரித்தார். இதே போன்று அவ்வப்போது அவனுடைய நண்பர்கள் இப்படி நடந்து கொள்வார்கள்.

Walter/(Image: A+E Network)

அவன் ஏன் என் வாழ்க்கையில் வந்தான் என்று நினைத்து கண்கலங்கிய காலங்கள் உண்டு. கல்லூரிக்கு செல்ல வேண்டும் என்று முடிவெடுத்த போது, நான் அப்போது அவர் வேண்டாம் என்று கூறி, நாம் முதல் முறையாக அவரை எதிர்த்து என்னால் போகமல் இருக்க முடியாது என்று கூறினேன்.

இதனால் இருவருக்கும் கடுமையான வாக்குவாதம் முற்றியது, உடனே அவர் வீட்டின் உள்ளே இருந்த துப்பாக்கியை எடுத்து வந்தார். அப்போது நிலை தடுமாறிய அவரை பிடித்த போது, எதிர்பார்தவிதமாக துப்பாக்கி குண்டு அவர் மேல் பட்டதால், இறந்தார்.

(Image: A+E Network)

இது ஒரு விபத்து தான், நான் வேண்டுமென்றே அவரை கொலை செய்யவில்லை, அதன் பின் அவரின் உடலை குழந்தைகளின் உதவியோடு புதைத்தேன் என்று கூறி முடித்தார்.

இந்த சம்பவம் 1984-ஆம் ஆண்டு நடந்தது, இந்த வழக்கு விசாரணையில் அவரின் காரணத்தை ஏற்று கொள்ளாத நீதிமன்றம், அவருக்கு ஆயுள் தண்டனை விதித்து தீர்ப்பளித்தது.

அவர் இதுவரை ஏழு முறை பரோல் கேட்டு முறையிட்டுள்ளார், ஆனால் அவரின் பரோல் ஏற்று கொள்ளப்படவில்லை, அடுத்த பரோல் 2020 ஆண்டும் எனவும், இவருக்கும் மூன்று பிள்ளைகள் இருப்பதாகவும், அதில் முதல் குழந்தையாக பிறந்த Roxanne Ghana-வில் வசித்து வருவதாக அங்கிருக்கும் உள்ளூர் ஊடகம் தெரிவித்துள்ளது.

மேலும் அமெரிக்கா செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்