ரெயில்வே நடைமேடையில் சாண்ட்விச் சாப்பிட்டவருக்கு ஏற்பட்ட துயரம்

Report Print Arbin Arbin in அமெரிக்கா

அமெரிக்காவில் ரெயில்வே நடைமேடையில் சாண்ட்விச் சாப்பிட்டவரை பொலிசார் கைவிலங்கிட்டு அழைத்துச் சென்ற சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியது.

கலிபோர்னியா மாநிலத்தில் சான் பிரான்சிஸ்கோ உள்ளிட்ட நகரங்களில் விரிகுடா பகுதி விரைவு ரெயில் போக்குவரத்து கழகம் செயல்பட்டு வருகிறது.

அப்பகுதியில் உள்ள காண்ட்ரா கோஸ்டா நகர ரெயில் நிலையத்தில் கடந்த வாரம் ஸ்டீவ் பாஸ்டர் என்பவர் வேலைக்கு செல்வதற்காக நின்று கொண்டிருந்தார்.

அப்போது காலை உணவாக நடைமேடையில் வைத்து சாண்ட்விச் சாப்பிட்டுள்ளார்.

இதையடுத்து அங்கிருந்த காவலர் ஒருவர் அவரை தடுத்துள்ளார். ரெயில் நிலையங்களில் உணவுப்பொருட்கள் சாப்பிடுவது கலிபோர்னியா மாநில விதிமுறைகளுக்கு எதிரானது.

விதிமுறையை மீறிய உங்களை ஏன் கைது செய்யக் கூடாது என கேள்வி எழுப்பியவாறே அவரை கைது செய்துள்ளார்.

ரெயில் நிலையத்தில் அனைவரையும் விட்டுவிட்டு தன்னை மட்டும் குற்றம் சாட்டுவதாக ஸ்டீவ் பாஸ்டர் குறிப்பிட்டார்.

ஆனால் அந்த காவல்துறை அதிகாரி, அவரை பிடித்து இழுத்துள்ளார். இதை பலரும் வீடியோ எடுத்து சமூக வலைத்தளங்களில் வெளியிட்டுள்ளனர்.

(Picture: Facebook)

பொதுமக்களில் ஒருவர், ரெயில் நிலைய நடைமேடை அருகே உணவுப்பொருட்கள் விற்கும் கடை ஏன் உள்ளது?

இங்கு உணவு உண்பது சட்டவிரோதமானது என்பதற்கான எந்த அறிவிப்புகளும் இல்லையே? என கேள்வி எழுப்பினார்.

அறிவிப்புகள் உள்ளன என மற்றொரு காவல்துறை அதிகாரி இன்னொரு வீடியோவில் தெரிவித்தார்.

இதையடுத்து 3 காவல்துறை அதிகாரிகள் அங்கு வந்து ஸ்டீவ் பாஸ்டரை கைவிலங்கிட்டு தனி அறைக்கு அழைத்துச்சென்றனர்.

இது குறித்து ரெயில்வே போக்குவரத்து அதிகாரிகள் கூறுகையில், கலிபோர்னியா விதிகளின் படி தடை செய்யப்பட்ட பகுதிகளில் உணவுப்பொருட்கள் உண்பது சட்ட விரோதமானது.

பாஸ்டர் கைது செய்யப்படவில்லை. விதிமுறைகள் மீறியதற்காக அவருக்கு சம்மன் வழங்கப்பட்டுள்ளது.

ஆனால் தன்னைப்பற்றிய விவரங்களை பொலிசாரிடம் கூற மறுத்ததால் சட்டபூர்வமாக கைவிலங்கிடப்பட்டார் என தெரிவித்துள்ளனர்.

மேலும் அமெரிக்கா செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்

Latest Offers