10 வயதில் கடலில் தூக்கி வீசப்பட்ட கடிதம்... 9 ஆண்டுகளுக்கு பின் கிடைத்த பதில்

Report Print Vijay Amburore in அமெரிக்கா

அமெரிக்காவை சேர்ந்த ஒரு இளைஞர் 10 வயதில் கடலில் தூக்கி வீசிய கடிதத்திற்கு 9 வருடங்கள் கழித்து பதில் கிடைத்துள்ளது.

அமெரிக்காவை சேர்ந்த மேக்ஸ் வ்ரெடன்பர்க் என்கிற இளைஞர் தன்னுடைய 10 வயதில் ஆகஸ்ட் 2010 அன்று, போஸ்டனுக்கு வடக்கே உள்ள அழகிய பழைய மீன்பிடி நகரமான ராக்போர்ட்டில், ஒரு கடிதம் எழுதி பாட்டினுள் அடைத்து கடலில் தூக்கி எறிந்தார்.

ஆப்பிள், கடற்கரை மற்றும் விண்வெளி உள்ளிட்ட தனக்கு பிடித்த சில விஷயங்களை பட்டியலிட்ட அவர், கடிதத்தைப் பெறுபவர் “தயவுசெய்து மீண்டும் பதில் எழுதுங்கள்” என்றும் குறிப்பிட்டிருந்தார்.

இந்த நிலையில் 9 வருடங்கள் கழித்து அக்டோபர் 10 ஆம் தியன்று தெற்கு பிரான்சின் அட்லாண்டிக் கடற்கரையில் கடிதம் கைப்பற்றப்பட்டதாக “ஜி டுபோயிஸ்” என்பவர் மேக்ஸ் தந்தைக்கு கடிதம் எழுதியுள்ளார்.

அதனை பார்த்து பெரும் மகிழ்ச்சியடைந்துள்ள மேக்ஸ், சிறுவயதில் தான் எழுதிய கடிதத்துடன், பதில் வந்திருக்கும் கடிதத்தையும் சேர்த்து இணையத்தில் பதிவிட்டுள்ளார்.

“கான்டிஸுக்கும் மிமிசானுக்கும் இடையில் பிரான்சில் ஒரு கடற்கரையில்” கடிதம் காணப்பட்டதாக குறிப்பிட்டுள்ளார். பியாரிட்ஸுக்கு வடக்கே சுமார் ஒன்றரை மணிநேர பயண தூரத்தில், பைரனீஸ் மற்றும் ஸ்பானிஷ் எல்லையில் கண்டெடுக்கப்பட்டதாவும், அதனுடன் ஒரு வரைபடத்தையும் இணைத்துள்ளார்.

மேலும் அமெரிக்கா செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்

Latest Offers