மூச்சே ஒரு கணம் நின்று போனது... பனிப்பகுதியில் மோதி நின்ற விமானம்: வாய்விட்டு அலறிய பயணிகள்

Report Print Arbin Arbin in அமெரிக்கா

அமெரிக்காவின் சிகாகோ விமான நிலையத்தில் தரையிறங்கிய விமானம் ஒன்று ஓடுதளத்தில் இருந்து விலகி பனியால் உறைந்திருந்த தரையில் மோதி நின்ற சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

பரபரப்பான சிகாகோ விமான நிலையத்தில் நேற்று மாலை நேரம் இச்சம்பவம் நடந்துள்ளது. இதில் ஓடுதளத்தில் இருந்து விலகிய விமானத்தின் ஒரு இறக்கை பனியில் பலமாக மோதியுள்ளது.

விமானம் தரையிறங்கிய போதே பனி மூடியிருந்த ஓடுதளத்தில் கட்டுப்பட்டை இழந்துள்ளது. பயணிகளில் பலரும் பயத்தில் அலறியுள்ளனர்.

சிலர் மூச்சுவிடவே ஒருகணம் மறந்ததாக தெரிவித்துள்ளனர். 38 பயணிகளும் 3 விமான ஊழியர்களுடன் சிகாகோ விமான நிலையத்தில் வந்திறங்கிய இந்த விமானத்தில் இருந்து பின்னர் பயணிகளை பத்திரமாக மீட்டுள்ளனர்.

பனிப்பொழிவு காரணமாக முதலில் தரையிறங்க முயன்று, நிலைமை சாதகமாக இல்லை என்பதால் இந்த விமானத்தை தரையிறக்க முடியாமல் விமானிகள் தத்தளித்துள்ளனர்.

சுமார் 20 நிமிடங்கள் அதன் பின்னர் மீண்டும் மேலெழுந்து விமானம் வட்டமிட்டுள்ளது. அதன் பின்னர் இரண்டாவது முறையாக தரையிறங்கிய நிலையிலேயே விமானம் ஓடுதளத்தில் இருந்து தடுமாறி விலகி பனிப்பகுதியில் மோதி நின்றுள்ளது.

சிகாகோ பகுதி கடந்த சில நாட்களாக கடும் பனிப்பொழிவால் தடுமாறி வருகிறது. 6 அங்குலம் வரை இப்பகுதியில் பனிப்பொழிவுக்கு வாய்ப்பிருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது.

பனிப்பொழிவு காரணமாக சிகாகோ விமான நிலையத்தில் தரையிறங்கவும் வெளியேறவும் முடியாமல் சுமார் 440 விமானங்கள் இதுவரை ரத்து செய்யப்பட்டுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. மேலும் 95 விமானங்களுக்கு அனுமதி மறுக்கப்பட்டுள்ளது.

(Image: Twitter)

மேலும் அமெரிக்கா செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்

Latest Offers