கின்னஸ் உலக சாதனைப் பட்டியலில் உலகின் மிக வயதான தம்பதி

Report Print Arbin Arbin in அமெரிக்கா

அமெரிக்காவின் டெக்சாஸ் மாகாணத்தில் குடியிருக்கும் தம்பதி ஒன்று, உலகில் உயிருடன் இருக்கும் அதிக வயதானவர்கள் என்ற சாதனையை படைத்துள்ளனர்.

டெக்சாஸ் மாகாணத்தின் ஆஸ்டின் பகுதியில் குடியிருந்து வருபவர்கள் 106 வயதான John Henderson மற்றும் இவரது மனைவி 105 வயதான Charlotte.

டெக்சாஸ் பல்கலைக்கழகத்தில் 1934 ஆம் ஆண்டு இருவரும் ஒன்றாக கல்வி பயின்றபோது காதல்வசப்பட்டுள்ளனர்.

தொடர்ந்து 1939 ஆம் ஆண்டு இருவரும் திருமணம் செய்து கொண்டுள்ளனர். திருமணத்திற்கு பின்னர் தேனிலவு கொண்டாட்டத்திற்காக அப்போதைய பொருளாதார சூழல் காரணமாக வெறும் 7 டொலரே செலவிட்டுள்ளனர்.

எதிர்வரும் டிசம்பர் 15 ஆம் திகதி தங்களது 80-வது திருமண நாளை இந்த தம்பதி கொண்டாட உள்ளனர்.

2018 ஆம் ஆண்டு டெக்சாஸ் மாகாணத்தில் அதிக வயதான தம்பதிகள் என்ற வகையில் மாகாண ஆளுநர் இவர்களை சிறப்பித்துள்ளது குறிப்பிடத்தக்கது.

மேலும் அமெரிக்கா செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்

Latest Offers

loading...