தமிழ் உட்பட 8 மொழிகளில் புலம்பெயர்ந்தோரிடம் பேசி.. அமெரிக்காவை அதிர வைத்த மோடி: வைரல் வீடியோ

Report Print Basu in அமெரிக்கா

அமெரிக்காவில் நடைபெற்ற இந்திய-அமெரிக்க சமூகத்தினருடனான Howdy Modi நிகழ்ச்சியில் கலந்துக்கொண்ட இந்திய பிரதமர் மோடி, தமிழ் உட்பட 8 இந்திய மொழிகளில் பேசி அசத்தினார்.

ஐ.நா பொதுக்கூட்டத்தில் பங்கேற்ற அமெரிக்காவிற்கு சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ளார் இந்திய பிரதமர் மோடி. இந்நிலையில், Houston-ல் என்.ஆர்.ஜி ஸ்டேடியத்தில் நடந்த இந்திய-அமெரிக்க சமூகத்தினருடனான கூட்டத்தில் அமெரிக்கா ஜனாதிபதி டிரம்ப் உடன் மோடி கலந்துக்கொண்டார்.

இக்கூட்டத்தில், சுமார் 50,000 பேர் கலந்துக்கொண்டதாக கூறப்படுகிறது. இக்கூட்டத்தில் புலம்பெயர்ந்தோர்கள் மத்தியில் உரையாற்றிய மோடி, தமிழ் உட்பட 8 இந்திய மொழிகளில் பேசி அசத்தினார்.

Howdy Modi-யின் விரிவாக்கம் மோடி நீங்கள் எப்படி இருக்கீங்க? என்பதாகும். கூட்டத்தில் பேசிய மோடி, அமெரிக்காவில் உள்ள இந்திய சமூகத்திற்கு உறுதியளிக்கும் வகையில், கிட்டத்தட்ட எட்டு மொழிகளில் “எல்லாம் நன்றாக இருக்கிறது” என்று கூறினார்.

இதைக்கேட்ட மக்கள் ஆரவாரத்தில் மோடி..மோடி என அரங்கை அதிர வைத்தனர்.இதை அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் டிரம்ப் பார்வையாளருடன் அமர்ந்து ரசித்தார்.

மேலும் பேசிய இந்திய பிரதமர், 130 கோடி இந்திய மக்களின் ஆணைகளை ஏற்று செயல்படும் சாதாரணத் தொண்டன் நான். எனவே, என்னைப் பார்த்து எப்படி இருக்கீங்க (Howdy Modi) என்று கேட்டால், இந்தியாவில் எல்லாம் சிறப்பாக இருக்கிறது.

பயங்கரவாதத்திற்கு எதிராக போராட வேண்டிய காலம் வந்துவிட்டது; தங்கள் சொந்த நாட்டையே கையாளத் தெரியாமல் தடுமாறிக் கொண்டிருக்கிறார்கள் என குறிப்பிடாமல் பாகிஸ்தான் மீது பிரதமர் மோடி கடும் விமர்சித்தார்.

இந்த நிகழ்ச்சியில் பங்கேற்க விரும்பி ஏராளமானோர் பதிவு செய்து கொண்டதாகவும், இட நெருக்கடி காரணமாக அவர்களால் கலந்துகொள்ள இயலவில்லை என்றும் அறிகிறேன். அதற்காக மன்னிக்க வேண்டுகிறேன் என மோடி கூறினார்.

மேலும் அமெரிக்கா செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்