வெளிநாட்டில் நீருக்குள் மூழ்கி உயிருக்கு போராடிய உயிர் நண்பன்: துயரத்தில் முடிந்த இளைஞரின் முயற்சி

Report Print Arbin Arbin in அமெரிக்கா

அமெரிக்காவின் ஓக்லஹோமா மாகாணத்தில் சுற்றுலா சென்ற இரு இந்திய மாணவர்கள் நீருக்குள் மூழ்கி உயிரிழந்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

அமெரிக்காவின் டெக்சாஸ் பல்கலைக்கழகத்தில் கல்வி பயின்று வந்த 23 வயதான இரு இந்திய மாணவர்களே நீருக்குள் மூழ்கி பலியானவர்கள்.

இந்த விவகாரம் தொடர்பில் டேவிஸ் பகுதி பொலிசார் தகவல் வெளியிட்டுள்ளனர்.

ஓக்லஹோமா மாகாணத்தில் உள்ள பிரபலமான சுற்றுலா தலமான டர்னர் நீர்வீழ்ச்சியில் இந்த துயர சம்பவம் அரங்கேறியுள்ளதாக தெரிவித்துள்ளனர்.

டர்னர் நீர்வீழ்ச்சியில் இளைஞர் ஒருவர் குதித்துள்ளார். ஆனால் நீச்சல் தெரியாத அவர் உயிருக்கு போராடியதாக கூறப்படுகிறது.

இதைப் பார்த்த அவரது நண்பர் உடனடியாக குதித்து அவரை காப்பாற்ற அந்த நீர்வீழ்ச்சியில் குதித்துள்ளார்.

ஆனால் இருவரும் பின்னர் மேலெழும்பவில்லை என கூறப்படுகிறது. மட்டுமின்றி இருவரும் உயிர் காக்கும் கவசம் ஏதும் அணிந்திருக்கவில்லை என்றும் தெரியவந்துள்ளது.

இந்த நிலையில் டேவிஸ் பகுதி பொலிசார் மேற்கொண்ட தேடலுக்கு பின்னர் இருவரது சடலங்களையும் மீட்டுள்ளனர்.

கொல்லப்பட்ட இருவரும் இந்தியாவின் ஆந்திரா மாநிலத்தை சேர்ந்தவர்கள் எனவும், ஒருவர் 23 வயதான அஜய் குமார் எனவும் இன்னொருவர் 22 வயதான தேஜா கவுஷிக் எனவும் பொலிசார் தகவல் வெளியிட்டுள்ளனர்.

கடந்த ஜூலை 4 ஆம் திகதி தேசிய விடுமுறையை முன்னிட்டு, இப்பகுதிக்கு சுற்றுலா சென்ற இரு இந்திய மாணவர்கள் நீருக்குள் மூழ்கி பலியான சம்பவம் நினைவு கூரத்தக்கது.

மேலும் அமெரிக்கா செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்