அழுகிய நிலையில் 5 வயது மகளோடு ஒரு வாரம் இருந்த தாய்... விசாரணையில் வெளியான திடுக்கிடும் தகவல்

Report Print Santhan in அமெரிக்கா

அமெரிக்காவைச் சேர்ந்த தாய் ஒருவர் மகள் இறந்து ஒரு வாரம் ஆன நிலையில், அவரை போர்வையில் மறைத்து வைத்த சம்பவம் தற்போது வெளிச்சத்திற்கு வந்துள்ளது.

அமெரிக்காவின் டெக்ஸாஸ் மாகாணத்தைச் சேர்ந்தவர் Priscilla Torres. 27 வயதான இவருக்கு Sierra Patino என்ற 5 வயது மகள் உள்ளார்.

இந்நிலையில் அந்த சிறுமி அவரின் வீட்டில் அழுகிய நிலையில் மீட்கப்பட்டார். இதையடுத்து இதை செய்த குற்றத்திற்காக உடனடியாக கைது செய்யப்பட்ட தாயார் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்டு, சிறையில் அடைக்கப்பட்டுள்ளார்.

அப்போது வழக்கு விசாரணையில், முதலில் கழிப்பறை சுத்தம் செய்யும் திராவகத்தை மகள் குடித்ததால், இறந்துவிட்டதாக கூறிய அவர், அதன் பின் தன்னுடைய காதலன் தான் இதற்கு காரணம் என்று கூறியுள்ளார்.

அதன் பின் கடந்த 23-ஆம் திகதி, நான் வீட்டில் சமைத்து கொண்டிருந்த போது, மகளின் உடல்கள் தீக்காயம் போல் இருந்தன. இதனால் நான் அவளை மருத்துவமனைக்கு அழைத்து செல்லலாம் என்று இருந்தேன், ஆனால் குழந்தை பாதுகாப்பு குறித்தும், இது எப்படி நடந்தது என்றெல்லாம் கேள்வி கேட்பார்கள்.

அதற்கு பதில் கூற முடியாது என்று பயந்தேன், அதன் காரணமாகவே மருத்துவமனைக்கு அழைத்துச் செல்லவில்லை, அவள் கடந்த 27-ஆம் திகதி இறந்தாள். அவளை விட்டு எனக்கு பிரிய மனம் இல்லை, இதனால் ஒரு போர்வையில் அவளை போத்தி வைத்திருந்தேன் என்று கூறியுள்ளார்.

இந்த சம்பவம் எதார்த்தமாக நடந்ததா? இல்லையா? என்பது தெரியவில்லை. இருப்பினும் தொடர் விசாரணை நடைபெற்று வருவதாகவும், முழு விசாரணைக்கு பின்னரே இது தெரியவரும் என்றும் அங்கிருக்கும் உள்ளூர் ஊடகங்கள் தெரிவித்துள்ளன.

மேலும் தற்போது சந்தேகத்தின் அடிப்படையில் சிறையில் அடைக்கப்பட்டிருப்பதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

மேலும் அமெரிக்கா செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்