ஓவர்டைம் வேண்டும் என்பதற்காக விமானத்தை வேண்டுமென்றே பழுதாக்கிய மெக்கானிக்!

Report Print Balamanuvelan in அமெரிக்கா

தனக்கு ஓவர்டைம் கிடைக்க வேண்டும் என்பதற்காக, வேண்டுமென்றே விமானத்தை பழுதாக்கிய மெக்கானிக் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார்.

Abdul-Majeed Marouf Ahmed Alani என்னும் அந்த நபர், அமெரிக்காவின் ப்ளோரிடாவிலுள்ள மியாமி சர்வதேச விமான நிலையத்தில் விமானத்தின் வழிகாட்டும் கருவியை சேதப்படுத்தியுள்ளார்.

இதனால் என்ன பிரச்னை ஏற்படும் என்றால் வழிகாட்டும் கருவி இல்லாமல், தாமாகவே விமானி விமானத்தை செலுத்த வேண்டியதாகியிருக்கும்.

அந்த விமானம் பழுதாகி தாமதமானாலோ அல்லது ரத்து செய்யப்பட்டாலோ, தனக்கு ஓவர்டைம் கிடைக்கும் என்ற எண்ணத்தில் Alani அவ்வாறு செய்துள்ளார்.

நல்ல வேளையாக, விமானம் புறப்படுவதற்கு முன் விமானி அந்த பிரச்னையை கவனித்ததால், பஹாமாசுக்கு செல்ல வேண்டிய அந்த விமானத்திலிருந்த 150 பயணிகள் எந்த ஆபத்துமின்றி தப்பினார்கள்.

சம்பவம் தொடர்பாக விமான பாதுகாப்புப் படையினர் ஆய்வு செய்தபோது சிக்கிய கமெரா காட்சிகளின் அடிப்படையில் கைது செய்யப்பட்ட Alani, இன்று மியாமி ஃபெடரல் நீதிமன்றத்தில் ஆஜர் செய்யப்பட இருக்கிறார்.

விமானம் ஒன்றை வேண்டுமென்றே பழுதாக்கியதாக அவர் மீது குற்றம் சாட்டப்பட்டுள்ளது.

Alani விமானத்தை பழுதாக்கும்போது அவருடன் இருந்த மூன்று மெக்கானிக்குகள் அவரை கைது செய்ய உதவியதாக கூறப்படுகிறது.

மேலும் அமெரிக்கா செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்