குற்றவாளியிடம் குழந்தையை கொடுத்த பெண், கொன்று பிரீஸரில் அடைத்த காதலன்: 99 ஆண்டுகள் சிறை!

Report Print Balamanuvelan in அமெரிக்கா

தேடப்படும் குற்றவாளியான தனது காதலனிடம் ஒரு பெண் தனது குழந்தையை ஒப்படைத்துச் செல்ல, அவர் அந்த குழந்தைக்கு போதைப்பொருளைக் கொடுத்து கொன்று பிரீஸரில் அடைத்தார்.

Amanda Gail Oakes (36) என்னும் அந்த பெண்ணுக்கு தனது மகனின் மரணத்துக்கு காரணமாக இருந்த குற்றத்திற்காகவும், இறந்த உடலை துஷ்பிரயோகம் செய்ததற்காகவும் அமெரிக்க நீதிமன்றம் ஒன்று, 99 ஆண்டுகள் சிறைத்தண்டனை விதித்து உத்தரவிட்டுள்ளது.

Oakes என்னும் அந்த குழந்தையை தனது காதலனான Carlton James Mathis (28) இடம் ஒப்படைத்துவிட்டு வெளியே சென்று விட்டு திரும்பும்போது அந்த குழந்தை இறந்து கிடந்திருக்கிறது.

சம்பவம் நடந்தபோது Amandaவும் Mathisம் பயங்கர போதையில் இருந்திருக்கிறார்கள். குழந்தைக்கும் போதைப்பொருள் கொடுக்கப்பட்டதும், அதனாலேயே அது உயிரிழந்ததும் பின்னர் தெரியவந்தது.

பின்னர் Amandaவும் Mathisம் தப்பியோடும்போது, Mathis பொலிசாரை துப்பாக்கியைக் காட்டி மிரட்டியதையடுத்து அவர் கைது செய்யப்பட்டார். அப்போது Amandaவும் உடன் இருந்ததாக தெரிகிறது.

அவர்கள் பிடிபட்ட பின்புதான், குழந்தையைக் கொன்று அவர்கள் தங்கியிருந்த ஹொட்டல் ஒன்றிலிருந்த பிரீஸரில் வைத்திருந்த விடயம் தெரியவந்தது குறிப்பிடத்தக்கது. Mathis மீதான வழக்கு நவம்பர் மாதம் நடைபெற உள்ளது.

மேலும் அமெரிக்கா செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்

Latest Offers

loading...