டிரம்ப்பை நம்ப வைத்து முட்டாளாக்கிய பெண் உதவியாளருக்கு நேர்ந்த கதி

Report Print Basu in அமெரிக்கா

அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் டிரம்பின் தனிப்பட்ட வாழ்க்கையைப் பற்றிய தகவல்களை கசியவிட்ட அவரது தனிப்பட்ட உதவியாளர் பதவி விலகியுள்ளார்.

Madeleine Westerhout, டொனால்ட் டிரம்பின் தனிப்பட்ட உதவியாளராக 2017 முதல் பணியாற்றி வருகிறார். தனிப்பட்ட தகவல்களை கசியவிட்டது Madeleine Westerhout என டிரம்ப் அறிந்ததை அடுத்து அவர் உடனடியாக பதவி விலகியதாக கூறப்படுகிறது.

ஓவல் அலுவலகத்தில் பணியாற்றி வரும் Madeleine Westerhout, டிரம்பின் நிகழ்ச்சி அட்டவணை மற்றும் குடும்பம் குறித்த விவரங்களைப் பகிர்ந்து கொண்டது தொடர்பாக நேற்று ராஜினாமா செய்தார் என்று நியூயார்க் டைம்ஸ் தெரிவித்துள்ளது.

இந்த ஆண்டு ஓவல் அலுவலகத்தின் ஆபரேஷன்ஸ் இயக்குநராக பதவி உயர்வு பெற்ற Madeleine Westerhout, அண்மையில் செய்தியாளர்களுடனான இரவு விருந்தின் போது தகவல்களை வெளியிட்டதாக கூறப்படுகிறது.

வாஷிங்டன் டைம்ஸ் பத்திரிகையின் படி, இந்த ஆண்டின் தொடக்கத்தில் ஜனாதிபதியின் அட்டவணை கசிந்திருப்பது அவமானகரமான நம்பிக்கையை மீறுவதாகும் என்று Madeleine Westerhout விவரித்திருந்தார்.

டிரம்ப் ஜனாதிபதியானதிலிருந்து ஐம்பதுக்கும் மேற்பட்ட ஊழியர்கள் வெளியேறினர்: ரஷ்யாவின் விசாரணைக்கு தலைமை தாங்கிய FBI இயக்குனர் ஜேம்ஸ் காமியை டிரம்ப் நீக்கியது போன்ற ஒரு சில சர்ச்சைக்குரியவை.

மேலும் அமெரிக்கா செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்