மிருகத்தை போல மனைவியை அழைத்த அமெரிக்க அதிபர் ட்ரம்ப்: விளாசும் நெட்டிசன்கள்

Report Print Vijay Amburore in அமெரிக்கா

அமெரிக்க அதிபர் டொனால்டு ட்ரம்ப் தனது மனைவியை தொடையில் தட்டி அழைக்கும் வீடியோ காட்சி இணையத்தில் வைரலாக பரவி வருகிறது.

திருமணம் முடிந்து 14 வருடத்தை கடந்து விட்ட நிலையில் அமெரிக்க அதிபர் டொனால்டு டிரம்ப் அவருடைய மனைவி மெலானியாவை தொடையில் தட்டி அழைக்கும் வீடியோ காட்சி ஒன்று இணையத்தில் பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது.

இந்த வீடியோ காட்சியினை பார்த்த இணையதளவாசிகள் டிரம்பை கடுமையாக விமர்சித்து வருகின்றனர். பெண்ணுக்கு உண்டான மரியாதையை கொடுக்க தவறியதாகவும், நாயை போல தொடையில் தட்டி அழைப்பதாகவும் பதிவிட்டுள்ளனர்.

அந்த வீடியோவில் காரில் இருந்து இறங்கிய டிரம்ப், தன்னுடைய தொடையில் மூன்று முறை தட்டிய பிறகு அவருடைய மனைவி மெலானியா வெளியில் வருகிறார்.

குறுகிய கிளிப்பில் அதிபர் உண்மையில் தனது மனைவியை அழைக்கிறாரா என்பது தெளிவாக இல்லை. மேலும் ஒரு பயனர் அவர் உண்மையில் தனது பைகளை சரிபார்த்துக் அப்படி செய்திருக்கலாம் என சுட்டிக்காட்டியுள்ளார்.

இந்த வீடியோ காட்சியானது, ஜி 7 உச்சிமாநாட்டில் கனேடிய பிரதமர் ஜஸ்டின் ட்ரூடோவிற்கு மெலனியா முத்தம் கொடுக்கும் புகைப்படம் வெளியானதை அடுத்து வைரலாகியுள்ளது.

மேலும் அமெரிக்கா செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்