படுக்கையில் வேறு பெண்ணுடன் நிர்வாணமாக இருந்த வருங்கால கணவன்! அதை பார்த்து கண்ணீர் விட்ட புதுப்பெண்

Report Print Raju Raju in அமெரிக்கா

அமெரிக்காவில் தனது வருங்கால கணவர் வேறு பெண்ணுடன் சொந்த வீட்டிலேயே நிர்வாணமாக இருப்பதை பார்த்த இளம்பெண் அதிர்ச்சியடைந்த நிலையில் தான் தவறு செய்துவிட்டதாக அந்த ஆண் அறிக்கை ஒன்றை வெளியிட்டு மன்னிப்பு கோரியுள்ளார்.

ஜவி மராகுன் என்பவர் நடிகராக உள்ளார். இவருக்கு ஏற்கனவே திருமணமாகி குழந்தைகள் உள்ள நிலையில் கடந்த 2017ல் மனைவியை பிரிந்துவிட்டார்.

இதையடுத்து லவுரன் என்ற இளம்பெண்ணுடன் அவருக்கு காதல் ஏற்பட்டது.

இதை தொடர்ந்து இருவருக்கும் திருமணம் நிச்சயதார்த்தம் முடிந்த நிலையில் விரைவில் திருமணம் நடக்கவுள்ளது.

இந்நிலையில் ஜவி தனது வீட்டில் மது விருந்து நடத்தியுள்ளார். இந்த விருந்தில் லவுரன் கலந்து கொள்ளாத நிலையில் விருந்து முடிந்த பின்னர் ஜவியை காண வந்தார்.

அப்போது அவர் வீட்டின் படுக்கையறையில் ஜவியும் வேறு ஒரு பெண்ணும் நிர்வாண நிலையில் இருப்பதை பார்த்து அதிர்ச்சியடைந்த லவுரன் அங்கிருந்து கண்ணீருடன் உடனடியாக வெளியேறினார்.

இதை தொடர்ந்து ஜவியும், லவுரனும் சமூகவலைதளங்களில் ஒருவரையொருவர் பின் தொடர்வதை நிறுத்தி கொண்டனர்.

இதனால் இருவரும் பிரிந்துவிட்டதாக கூறப்பட்டது. இந்த சூழலில் லவுரனிடம் மன்னிப்பு கேட்டு இன்ஸ்டாகிராம் பக்கத்தில் ஒரு பதிவை ஜவி வெளியிட்டுள்ளார்.

அதில், நான் செய்த தவறுகளுக்கு மன்னிப்பு கேட்டு கொள்கிறேன், உன்னை மரியாதை குறைவாக நடத்தியிருந்தால் வருத்தம் தெரிவிக்கிறேன்.

நான் உலகிலேயே அதிகம் நேசிக்கும் பெண்ணின் மனதை காயப்படுத்திவிட்டேன்.

நிச்சயம் ஒருநாள் என்னை மன்னிப்பாய் என நம்புகிறேன், நீ என் வீட்டுக்கு வருவதற்காக எதையும் செய்வேன் என தெரிவித்துள்ளார்.

மேலும் அமெரிக்கா செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்