உயிரணு தானம் கோரிய பெண், செயற்கை கருவூட்டல் முறையில் பிறந்த குழந்தை: 16 ஆண்டுகளுக்குப்பின் தெரியவந்த உண்மை!

Report Print Balamanuvelan in அமெரிக்கா

தனது கணவரால் ஒரு குழந்தைக்கு தந்தையாக முடியாது என்ற உண்மை தெரியவந்தபோது, தனது மருத்துவரிடம் உயிரணு தானம் செய்யும் ஒருவரைத் தேடச் சொன்னார் ஒரு அமெரிக்கப்பெண்.

டெக்சாசைச் சேர்ந்த Margo Williams என்னும் அந்த பெண்ணுக்கு, ஒரு உயிரணு தானம் செய்தவர் கிடைத்துவிட்டதாக ஒரு நாள் தெரிவித்தார் அவரது மருத்துவரான Dr. KimMcMorries.

கலிபோர்னியாவிலுள்ள உயிரணு வங்கி ஒன்றிலிருந்து ஒரு உயிரணுவை ஏற்பாடு செய்துள்ளதாக McMorries கூற, செயற்கை முறை கருவூட்டல் மூலம் Eve Wiley என்னும் அழகிய பெண் குழந்தையைப் பெற்றெடுத்தார் Margo.

அமெரிக்காவில் DNA சோதனை செய்வது இப்போதெல்லாம் சாதாரணமாகிவிட்ட நிலையில், 16 வயதாகும்போது தனக்கு DNA சோதனை செய்து பார்த்தார் Eve.

சோதனையின் முடிவுகள், அவரது தந்தை கலிபோர்னியாவிலுள்ள ஒரு உயிரணு தானம் செய்பவரல்ல, தன் தாயின் மருத்துவரான McMorriesதான் என்பதை தெரியப்படுத்தியதும், அதிர்ச்சியில் வானமே இடிந்து தலை மீது விழுந்ததுபோல் இருந்தது Eveக்கு.

நமது மரபு அடையாளத்தின்மீதுதான் நம்முடைய வாழ்க்கையையே அமைத்துக் கொள்கிறோம், அதுதான் வாழ்க்கையின் அடிப்படையே, ஆனால், அந்த அடிப்படையே ஆடிப்போகும் என்றால், அதை தாங்கிக் கொள்ளமுடியவில்லை என்கிறார் Eve.

தனது சட்டத்தரணி மூலம் McMorries அலுவலகத்தை Eve தொடர்புகொண்டபோது, அவரோ, அவரது அலுவலக ஊழியர்களோ கருத்துக் கூற மறுத்துவிட்டனர்.

DNA சோதனைகள் பரவலாக பயன்பாட்டுக்கு வந்துள்ளதைத் தொடர்ந்து, பல மருத்துவர்கள் பல ஆண்டுகளாக தொடர்ந்து தங்கள் உயிரணுவைப் பயன்படுத்தி தங்களிடம் சிகிச்சைக்கு வந்த பெண்களை தாயாக்கியுள்ள சம்பவங்கள் வெளிவந்த வண்ணம் உள்ளன.

எனவே அப்படி தனது உயிரணுவை பயன்படுத்தி பெண்களை கருவுறச் செய்வதை, சில அமெரிக்க மாகாணங்கள் குற்றம் என சட்டத்தின் கீழ் கொண்டு வந்துள்ளன.

டெக்சாஸ் மாகாணம் அதை பாலியல் தாக்குதல் குற்றமாக சட்டத்தின் கீழ் கொண்டு வந்துள்ளது.

மேலும் அமெரிக்கா செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்