வாழ்நாள் முழுவதும் வாரா வாரம் $10,000 பணம் கிடைத்தும் அதை வேண்டாம் என கூறிய நபர்! ஏன் தெரியுமா?

Report Print Raju Raju in அமெரிக்கா

அமெரிக்காவில் லொட்டரியில் நபர் ஒருவருக்கு அவர் வாழ்நாள் முழுவதும் வாரம் $10,000 பணம் கிடைக்கும் படியான பரிசு விழுந்துள்ளது.

ப்ளோரிடாவை சேர்ந்தவர் இவாங்கிலிஸ் ஹல்கைஸ் (49). லொட்டரி சீட்டுகள் வாங்கும் பழக்கம் கொண்ட இவர் சமீபத்தில்ஓரு லொட்டரி சீட்டை வாங்கினார்.

அதில் அவருக்கு வாழ்நாள் முழுவதும் வாரம் $10,000 பணம் கிடைக்கும் படியான பரிசு விழுந்துள்ளது.

ஆனால் தனக்கு இப்படி அந்த பரிசு வேண்டாம் என லொட்டரி நிறுவனத்திடம் கூறிய ஹல்கைஸ் மொத்தமாக $8,450,000 பணத்தை லொட்டரி நிறுவனத்திடம் இருந்து பெற்று கொள்ள முடிவு செய்துள்ளார்.

இந்த பணத்தை கொடுக்க லொட்டரி நிறுவனமும் சம்மதம் தெரிவித்துள்ளது.

இதனிடையில் ஹல்கைஸ் வாங்கிய லொட்டரி சீட்டை விற்பனை செய்த கடைக்கு சிறப்பு ஊக்கத்தொகையாக $20,000 வழங்கப்படும் என லொட்டரி நிறுவனம் தெரிவித்துள்ளது.

மேலும் அமெரிக்கா செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்

Latest Offers

loading...