தனது செயலுக்காக வடகொரிய ஜனாதிபதி என்னிடம் மன்னிப்பு கேட்டார்: டிரம்ப்

Report Print Kabilan in அமெரிக்கா

அண்மையில் நடத்தப்பட்ட ஏவுகணை சோதனைகளுக்காக வடகொரிய ஜனாதிபதி கிம் ஜாங் உன் தன்னிடம் மன்னிப்பு கேட்டதாக டிரம்ப் தெரிவித்துள்ளார்.

வடகொரியா அடுத்தடுத்து ஏவுகணை சோதனைகளை நடத்தி வருவதால் கொரிய தீபகற்பத்தில் பதற்றம் நீடிக்கிறது. தங்களின் எதிர்ப்பையும் மீறி அமெரிக்காவும், தென் கொரியாவும் மத்திய கொரிய எல்லையில் ராணுவ கூட்டுப்பயிற்சியை நடத்தி வருவதற்கு வடகொரியா கண்டனம் தெரிவித்து வருகிறது.

அத்துடன் அமெரிக்காவுக்கான எச்சரிக்கை தான் இந்த ஏவுகணை சோதனைகள் என்று வடகொரிய தலைவர் கிம் ஜாங் உன் தெரிவித்தார். இதனால் மீண்டும் வடகொரியா-அமெரிக்கா இடையே மோதல் ஏற்படும் சூழல் உருவாகியுள்ளது.

இந்நிலையில், தொடர்ச்சியான ஏவுகணை சோதனைகளுக்காக வடகொரிய ஜனாதிபதி கிம் ஜாங் உன், தன்னிடம் மன்னிப்பு கேட்டதாக டிரம்ப் தெரிவித்துள்ளார். இதுதொடர்பாக தனது ட்விட்டர் பக்கத்தில் அவர் கூறுகையில்,

‘3 பக்கங்களை கொண்ட அழகான கடிதம் கிம் ஜாங் உன்னிடம் இருந்து எனக்கு வந்தது. அந்த கடிதத்தில், அவர் அபத்தமான மற்றும் அதிக செலவழிக்க கூட்டுப்பயிற்சி குறித்து புகார்களை தெரிவித்துள்ளார். அத்துடன் கூட்டுப்பயிற்சியை எச்சரிக்கும் விதமாக, ஏவுகணை சோதனைகளை நடத்தியதற்காக மன்னிப்பு கோரினார்.

அதே சமயம் கூட்டுப்பயிற்சி எப்போது நிறுத்தப்படுகிறதோ, அப்போது ஏவுகணை சோதனைகளும் நிறுத்தப்படும் என உறுதியளித்துள்ளார். அணு ஆயுதம் குறித்த பேச்சுவார்த்தைக்காக என்னை மீண்டும் சந்திக்க விருப்பம் தெரிவித்துள்ளார்’ என கூறியுள்ளார்.

Susan Walsh/AP Photo

மேலும் அமெரிக்கா செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்

Latest Offers

loading...