சிறுக சிறுக பணத்தை சேமித்த தமிழ் சிறுமி மேற்கொண்ட செயல்... வெளிநாட்டில் கிடைத்த கெளரவம்

Report Print Raju Raju in அமெரிக்கா

அமெரிக்காவில் நடைபெற்ற சர்வதேச குறும்பட விழாவில் தமிழகத்தை சேர்ந்த சிறுமிக்கு சிறந்த குழந்தை நட்சத்திர விருது கிடைத்துள்ளது.

திருப்பூர் அங்கேரிபாளையத்தைச் சேர்ந்தவர் பி.யூ.கிருஷ்ணன்.இவரது மகள் பேபி மஹா ஸ்வேதா, தனியார் பள்ளியில் 4-ம் வகுப்பு படித்து வருகிறார்.

கேரள மாநிலம் பாலக்காட்டை சேர்ந்த சுஜித் தாஸ் என்பவர் 'நான் யாரிடம் சொல்ல வேண்டும்' என்ற பெயரில் எடுத்த 10 நிமிட குறும்படத்தில் பேபி மஹா ஸ்வேதா நடித்திருந்தார்.

இந்த குறும்படம் கடந்த 2-ம் திகதி அமெரிக்காவில் உள்ள லாஸ் ஏஞ்சலீஸ் நகரில் நடைபெற்ற சர்வதேச குறும்பட விழாவுக்கு அனுப்பிவைக்கப்பட்டது.

விருதுகளுக்காக 60 நாடுகளைச் சேர்ந்த குறும்படங்கள் பரிசீலனைக்கு எடுத்துக் கொள்ளப்பட்டதில், சிறுமி பேபி மஹா ஸ்வேதா நடித்த குறும்படம் விருதை பெற்றுள்ளது. அவருக்கு சிறந்த குழந்தை நட்சத்திர விருது கிடைத்துள்ளது.

இது தொடர்பாக சிறுமியின் தந்தை கிருஷ்ணனிடம் பேசும் போது, 5 முதல் 12 வயதுக்கு உட்பட்டோர் பிரிவில், இந்த விருது மகளுக்கு கிடைத்துள்ளது.

இந்த படத்தை தயாரிக்க, தனது 3 ஆண்டு சிறு சேமிப்பு பணத்தையும் மகள் செலவிட்டுள்ளார். அவருக்கு விருது கிடைத்தது மகிழ்ச்சி அளிக்கிறது என கூறியுள்ளார்.

மேலும் அமெரிக்கா செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்

Latest Offers