அமெரிக்காவில் நடந்த கோர விமான விபத்து.. இந்திய வம்சாவளி மருத்துவர் குடும்பத்துடன் பலி!

Report Print Kabilan in அமெரிக்கா

அமெரிக்காவில் நடந்த விமான விபத்தில் இந்திய வம்சாவளி மருத்துவர் குடும்பத்துடன் பலியான சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

இந்தியாவைச் சேர்ந்த மருத்துவர் ஜஸ்விர் குரானா(60), கடந்த 20 ஆண்டுகளுக்கு முன் அமெரிக்காவுக்கு சென்று பணியாற்றி வந்தார். தனது குடும்பத்துடன் அவர் அங்கேயே வசித்து வந்தார்.

ஜஸ்விர் குரானாவும், அவரது மனைவி திவ்யாவும்(54) டெல்லியில் உள்ள எய்ம்ஸ் மருத்துவமனையில் பயிற்சி பெற்றவர்கள்.

இவர்களுக்கு சொந்தமாக சிறிய விமான ஒன்று உள்ளது. இந்நிலையில், தனது மனைவி திவ்யா, மகள் கிரணுடன் விமானத்தில் பயணித்துள்ளார் ஜஸ்விர் குரானா.

விமானம் கால்பந்து மைதானத்திற்கு அருகில் சென்று கொண்டிருந்தபோது எதிர்பாராத விதமாக விபத்துக்குள்ளானது. இந்த விபத்தில் மூன்று பேருமே உயிரிழந்தனர்.

இதனைத் தொடர்ந்து, சம்பவ இடத்திற்கு விரைந்த பொலிசார் மூவரின் உடல்களையும் கைப்பற்றினர்.

இந்த விபத்து குறித்து விசாரணை மேற்கொண்டுள்ள பொலிசார், குரானாவுக்கு மேலும் ஒரு மகள் இருக்கிறார் என்றும், அவர் விமானத்தில் பயணிக்காததால் உயிர் தப்பினார் என்றும் தெரிவித்துள்ளனர்.

மேலும் அமெரிக்கா செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்