தலையில் துப்பாக்கி குண்டுடன் கணவருக்கு வீடியோ அழைப்பு: மனைவி கூறிய கடைசி வார்த்தைகள்

Report Print Vijay Amburore in அமெரிக்கா

அமெரிக்காவின் ஓஹியோ மாகாணத்தில் நடத்தப்பட்ட துப்பாக்கி சூட்டில் குழந்தை பெற்று இரண்டு மாதங்கள் மட்டுமே ஆகியிருந்த தாய் ஒருவர் பரிதாபமாக உயிரிழந்துள்ளார்.

அமெரிக்காவின் ஓஹியோ மாகாணத்தில் ஞாயிற்றுக்கிழமை நடந்த பயங்கரமான துப்பாக்கி சூடு தாக்குதலில், துப்பாக்கி ஏந்தியவரின் தங்கை மேகன் பெட்ஸ் உட்பட ஒன்பது பேர் சுட்டுக்கொல்லப்பட்டனர். மேலும், 27 பேர் காயமடைந்தனர்.

இந்த சம்பவத்தில் பலியான லோயிஸ் ஓகல்ஸ்பி என்கிற 27 வயது தாய், இரண்டு மாதத்திற்கு முன்பு தான் தன்னுடைய மூன்றாவது குழந்தையை பெற்றெடுத்துள்ளார்.

இறப்பதற்கு கடைசி நிமிடங்களுக்கு முன் லோயிஸ் தன்னுடைய கணவருக்கு வீடியோ அழைப்பு செய்து ஆதரவான வார்த்தைகளை பேசியுள்ளார்.

இதுகுறித்து அவருடைய கணவர் டேரில் லீ தன்னுடைய பேஸ்புக் பக்கத்தில், "என் மனைவி எனக்கு வீடியோ கால் செய்து, பேபி என்னுடைய தலையில் துப்பாக்கி தோட்டா பாய்ந்து விட்டது. நான் உன்னை அதிகம் நேசிக்கிறேன். குழந்தைகளை நன்றாக பார்த்துக்கொள். என்னால் அழுகையை நிறுத்தமுடியவில்லை எனக்கூறிவிட்டு போனை வைத்துவிட்டார்" எனக்குறிப்பிட்டுள்ளார்.

மேலும் அமெரிக்கா செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்

Latest Offers