காதலரை கொல்வதற்காக பணம் கொடுத்த ஆபாச நடிகை: சிக்கியது எப்படி?

Report Print Balamanuvelan in அமெரிக்கா

தனது மகன்களில் ஒருவரின் தந்தையான தனது காதலரை கொல்வதற்காக, பணத்திற்கு கொலை செய்யும் ஒருவருக்கு பணம் கொடுத்துள்ளார் ஒரு ஆபாச நடிகை.

ஆனால் தனது காதலரை கொல்லச் சொல்லி தான் பணம் கொடுத்தது ஒரு ரகசிய பொலிசாரிடம் என்பது அவருக்கு தெரியாது.

அமெரிக்காவின் Idahoவைச் சேர்ந்த கத்ரினா என்னும் ஆபாச நடிகை, தனது காதலர் ஒருவரைக் கொல்வதற்காக தனது நண்பர் ஒருவரிடம் ஆலோசனை கேட்டிருக்கிறார்.

அந்த நண்பர், ஒருவரின் மொபைல் எண்ணைக் கொடுத்து, அவரை தொடர்பு கொண்டால் அவர் உதவுவார் என்று கூறியிருக்கிறார்.

அந்த நபர் ஒரு ரகசிய பொலிசார் என்பதை அறியாத கத்ரினா, அவரை தொடர்பு கொண்டு தனது காதலரை கொன்றால் 5,000 டொலர்கள் கொடுப்பதாக கூறியிருக்கிறார்.

அவருக்கு 2,500 டொலர்களை முன்பணமாக அனுப்பிய கத்ரினா, அவருக்கு ஒரு நன்றி கடிதமும் எழுதியதோடு, கொலை செய்தபின், மீதி 2,500 டொலர்களை தருவதாகவும் தெரிவித்துள்ளார்.

ஆதாரத்துடன் சிக்கிய கத்ரினாவை கைது செய்துள்ள பொலிசார், அவரை சிறையிலடைத்துள்ளனர்.

அவருக்கு பத்து ஆண்டுகள் சிறைத்தண்டனையுடன், 250,000 டொலர்கள் அபராதமும் விதிக்கப்படலாம்.

மேலும் அமெரிக்கா செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்

Latest Offers